நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் - அமைச்சர்களும் அழுதபடி பதவியேற்பு..ஒரே சோகம்!
கட்சித் தலைவர்களுக்கு அழைப்பில்லை
பதவியேற்பு விழாவில், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் உள்ளிட்ட
அதிகாரிகள் பங்கேற்றனர். பிற கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களுக்கு
அழைப்பு விடுக்கப்படவில்லை. எளிமையான முறையில் பதவியேற்பு விழா
நடைபெற்றது.
சட்டமன்ற தலைவராக தேர்வு
முன்னதாக நேற்று நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய சட்டமன்ற
கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தனது சகாக்களுடன்
ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதைத் தொடர்ந்து
ஆட்சியமைக்க வருமாறு பன்னீர் செல்வத்திற்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு
விடுத்தார்.
2வது முறை முதல்வர்
2வது முறையாக முதல்வராகியுள்ள ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம்
பெரியகுளத்தில் பிறந்தவர். பி.ஏ. படித்துள்ள இவர் பெரியகுளம் நகராட்சித்
தலைவராகவும், நகர அ.தி. மு.க. செயலாளராகவும் பதவி வகித்து உள்ளார்.
2001ல் முதல் முறை
2001-ம் ஆண்டு பெரியகுளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற
ஓ.பன்னீர்செல்வம் அப்போது வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் டான்சி நில வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றபோது, 2001-ம் ஆண்டு
செப்டம்பர் மாதம் 21ம் தேதி முதல் 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை
முதல்வராகப் பணியாற்றினார்.
மீண்டும் அமைச்சர்
பின்பு ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றவுடன், பொதுப்பணி,
மதுவிலக்குமற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக பணியாற்றினார்.
எதிர்க்கட்சித் தலைவர்
2006-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பெரியகுளம் சட்டசபை தொகுதியில்
இருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் எதிர்க் கட்சி தலைவராக
பணியாற்றினார்.
போடிநாயக்கனூர் எம்.எல்.ஏ
கடந்த சட்டசபை தேர்தலில் போடி தொகுதியில் இருந்து தேர்ந்து
எடுக்கப்பட்டார். 2-வது முறையாக முதல்வராக பதவி ஏற்க இருக்கும்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ரவீந்திரநாத்குமார்,
ஜெயபிரதீப் என்ற 2 மகன்களும், கவிதாபானு என்ற மகளும் உள்ளனர்.
குளிகைக்கு முன்பாக பதவியேற்பு
முன்னதாக எந்த நேரத்தில் பன்னீர் செல்வம் பதவியேற்பார் என்பதில் பெரும்
குழப்பம் நிலவியது. 1.30 மணிக்குள் பதவியேற்றாக வேண்டும். இல்லாவிட்டால்
குளிகை வந்து விடும் என்ற நிலை. இந்த நிலையில் குளிகை தொடங்க 5 நிமிடம்
இருந்த நிலையில் பதவியேற்றுக் கொண்டார் பன்னீர் செல்வம்.
Comments