இருபத்தொரு வயதில் உலக ஆணழகன் பட்டம் பெற்றவர்.
தொடர்ந்து ஏழு வருடங்களாக மிஸ்டர் ஒலிம்பியா பட்டத்தை தக்க வைத்திருந்தவர்.
பாடிபில்டர், நடிகர், சினிமா தயாரிப்பாளர் என்பதுடன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில கவர்னராகவும் இருப்பவர்.
அறுபத்தெட்டு வயதானாலும் இன்னமும் கட்டுக்குலையாத இரும்பு போன்ற வலுவான உடலுடன் உலகில் உள்ள அனைத்து 'பாடி பில்டர்களின்' மானசீக குருவாக திகழ்பவர்.
இவரது காமண்டர், டெர்மினேட்டர் போன்ற படங்கள் பார்த்தவர்களுக்குதான் தெரியும் இவரது உடல் வலிமை.
சென்னையில் அர்னால்டு:
சென்னையில்
நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் சென்னைக்கு
தனி விமானத்தில் வந்திருந்தார். இவரது வருகைக்காக மட்டும் எட்டு கோடி
ரூபாய் செலவழித்ததாக கூறப்படுவதன் மூலம் இவரது மதிப்பை உணரலாம்.
இத்தனை
கோடி ரூபாய் செலவழித்து வரவழைத்திருந்தாலும் அர்னால்டின் மனதை கவர்ந்தது
விழாவின் போது நடைபெற்ற பாடி பில்டர்களின் நிகழ்வுதான்.
நம்மூர் ஆணழகர்கள் பலர் அர்னால்ட் முன் தங்கள் உடல் அழகை பலவிதங்களில் எடுத்துக் காட்டினார்கள். நிறைவாக அர்னால்ட் முன் வந்து தலைவணங்கி வணக்கம் தெரிவித்தனர்.
இதை பார்த்து மகிழ்ந்த அர்னால்ட் தனது இருக்கையைவிட்டு எழுந்து அனைவரையும் கைகுலுக்கி பாராட்டினார்.
அவர் கைகுலுக்கி பாராட்டியவர்களில் ஒருவர்தான் முனுசாமி

காய்கறி வியாபாரம் செய்தவர்:
நீலகிரி
மாவட்டம் ஊட்டியில் உள்ள எளிய குடும்பத்தில் பிறந்தவர். குடும்ப சூழ்நிலை
காரணமாக கல்லூரி படிப்பை முடிக்காமல் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம்
பார்த்தவர்.
அர்னால்ட் படங்கள் பார்த்தது முதல் அவரைப்போலவே உடலைக் கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான முயற்சித்து வெற்றி பெற்றவர்.
பகல் முழுவதும் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்துவிட்டு அதிகாலையிலும் மாலையிலும் உடற்பயிற்சி கூடமே வீடாக நினைத்து உழைத்தவர்.கடுமையான பயிற்சி மற்றும் முயற்சி காரணமாக உடலை வலுவாக்கி கொண்டு முதல் முறையாக நீலகிரி மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியை பார்த்து வெறுமனே கைதட்டியதோடு தன் கடமை முடிந்ததாக கருதாத ஊட்டி தினலர் நிருபர் பிரதீபன் அவரது வறுமையான பின்னணியையும் அவருக்குள்ளான திறமையையும் தினமலர் மூலம் வெளிப்படுத்தி முனுசாமியை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார்.
அது மட்டுமின்றி அவருக்கு தேவையான உடற்பயிற்சி உபகரணங்களை நண்பர்களுடன் துணையுடன் வாங்கியும் கொடுத்தார் அதுவும் போதாது என்று நினைத்தவர் முனுசாமியை அழைத்துக்கொண்டு மாவட்ட விளையாட்டு அதிகாரியிடம் அழைத்துச்சென்று அவர் இலவசமாக உடற்பயிற்சி பெறுவதற்கான களத்தையும் ஏற்படுத்தி கொடுத்தார்.
இதன் பிறகு முனுசாமிக்கு ஏறுமுகம்தான் மாநில அளவிலான போட்டிகளிலும்,அகில இந்திய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றிகளை குவித்தார், குவித்து வருகிறார். பாடிபில்டர்களை மையமாக கொண்டு தயராகியுள்ள ஐ படத்திலும் நடித்துள்ளார்.
அர்னால்ட் முன் தமிழக ஆணழர்களின் திறமையை காட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் முனுசாமியும் ஒருவர்.இயக்குனர் ஷங்கரின் அன்பை பெற்றவர் இதன் காரணமாக அர்னால்ட் முன் நடைபெறும் ஆணழகன் நிகழ்வில் முனுசாமி முதலில் நிற்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.

அர்னால்டு முன்:
சினிமாவிலும் காலண்டரிலும் மட்டுமே பிரமிப்புன் பார்த்த அர்னால்டை இவ்வளவு
அருகில் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று
சொன்ன முனுசாமிக்கு இப்போது இருபத்துநான்கு வயதாகிறது.
சென்னையில் தங்கியுள்ளார் இங்குள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக உள்ளார்.
இளைஞர்கள் பலருக்கு நாங்கள்தான் ரோல்மாடலாக இருக்கிறோம்.எங்களைப் போன்ற உடல் அமைப்பு வரவேண்டும் என்று ஆர்வத்துடன் எங்களை அணுகும் இளைஞர்களை முதல் கட்டமாக அவர்களை மது சிகரெட் போன்ற தீய பழக்கவழக்கங்களின் பக்கம் விடமாட்டோம், அப்படிப்பட்ட பழக்கங்கள் இருந்தாலும் அதில் இருந்து மீட்டு எடுத்து விடுவோம்.இதன் காரணமாக ஆரோக்கியமான சமுதாயத்திற்கு நாங்களே அடித்தளமிட்டு வருகிறோம்.
என்னைப்போல தமிழகத்தில் ஆயிரமாயிரம் இளைஞர்களை உருவாக்க நினைக்கிறேன் ஆனால் உண்மையில் நான் என்னை காப்பாற்றிக்கொள்ளவே பொருளாதாரரீதியில் இன்னமும் சிரமப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். நல்ல ஊதியத்தில் நிரந்தரமான வேலை கிடைத்து விட்டால் பிறகு என் வழியையும், வாழ்க்கையையும் இளைஞர்களுக்கு அர்ப்பணித்துவிடுவேன் என்கிறார் முனுசாமி.
முனுசாமியுடன் தொடர்பு கொள்ள: 9787948726.

Comments