எதிர்க்கட்சிகள்:
எந்தந்த
நிகழ்வுகளுக்கு ஆதாரம் இருக்கிறதோ, அதையெல்லாம் உடனடியாக, தமிழக பா.ஜ.,
தலைமையிடம் சமர்ப்பிக்குமாறும், கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும்
கட்சித் தலைமை கேட்டுக் கொண்டிருக்கிறது.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவித்ததும், பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் போட்டியில் இருந்து ஒதுங்கின. ஆரம்பத்தில், இப்படியொரு முடிவை பா.ஜ., தரப்பிலும் எடுத்துவிடலாம் என்றே, கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் சிலர் சொல்லி வந்தனர்.ஆனால், தமிழக பா.ஜ.,வுக்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்தரராஜன்தான், தேர்தலில் கட்டாயம் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.'ஏற்கனவே, முதல்வர் ஜெயலலிதா, தமிழக அரசியல் அரங்கில் கண்ணுக்கு எட்டிய துாரம் வரையில் எதிரிகளே இல்லை என, சொல்லி வரும் சூழ்நிலையில், நாமும் உள்ளாட்சி தேர்தல் களத்தில் இல்லாமல் போனால், மக்கள் எல்லோரையும் போல நம்மையும் புறக்கணிக்கக்கூடும். அதனால், வெற்றியோ, தோல்வியோா களத்தில் தைரியமாக எதிர்த்து நிற்பதன் மூலம், நம்முடைய பலத்தை நிரூபிப்பதோடு, 2016 சட்டசபை தேர்தலுக்கு, இந்தத் தேர்தல் முன்னோட்டமாக அமையும்' என்று சொல்லி, களத்துக்கு வருவதில் தீவிரமாக இருந்தார் தமிழிசை.இதையே, கட்சியின் மேலிடத் தலைவர்களிடமும் சொல்லி, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒப்புதலும் பெற்றார்.ஆனால், எதிர்பார்த்ததையும் விட கூடுதலாகவே களத்தில் பா.ஜ.,வுக்கு சங்கடங்கள் வந்து சேர்ந்தன.

மிரட்டல்:
ஆரம்ப
கட்டத்திலேயே, பா.ஜ., வேட்பாளர்களை போட்டியிடாமல் செய்து விட வேண்டும்
என்று, ஆளும் தரப்பில் மிரட்டல், உருட்டல்களை ஆரம்பித்தனர்.
மசியாதவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி மயக்கப் பார்த்தனர். அப்படியும்
மடங்காதவர்களை, கடத்தினர். அதுவும் முடியாத இடங்களில், வேட்பாளர்களை வேட்பு
மனுதாக்கல் செய்ய விடாதபடி செய்தனர். பல இடங்களில் வேட்பாளர்களின் வேட்பு
மனுக்களை, தேர்தல் அலுவலர்கள் மூலமாக தள்ளுபடி செய்ய வைத்தனர்.இப்படி
எதுவுமே முடியாமல், களத்துக்கு வந்து போட்டியிட்ட இடங்களில் மட்டும்தான்,
தேர்தல் நடந்தது. தேர்தல் களத்திலும், அ.தி.மு.க.,வினர் அசரவில்லை.பா.ஜ.,
தரப்பு பலமாக இருந்த இடங்கள் அனைத்திலும் அமைச்சர்களே முன்னின்று,
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததை, தமிழகத்தின் பல இடங்களிலும்,
பா.ஜ.,வினர் தடுத்திருக்கின்றனர்; போலீசிலும், தேர்தல் கமிஷனிலும் புகார்
கூறியுள்ளனர்.இதனால், தமிழகம் முழுவதும் பா.ஜ.,வுக்கும்
அ.தி.மு.க.,வுக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைத்
தொடர்ந்து, தமிழகத்தில் பல காவல் நிலையங்களில் வழக்கு பதிவு
செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் நடந்த ஓட்டுச்சாவடிகளில் பா.ஜ.,வின் பூத்
ஏஜன்ட்கள் மிரட்டி, விரட்டப்பட்டிருக்கின்றனர். பின் கள்ள ஓட்டுப்
போட்டிருக்கின்றனர். இதை எதிர்த்து பல இடங்களில் சாலை மறியல்
போராட்டங்களும் நடந்திருக்கிறது.
உத்தரவு:
இப்படி தமிழகம் முழுவதும் நடந்த எல்லா சம்பவங்களையும், ஆதாரத்துடன் பதிவு செய்து வைக்குமாறு, கட்சித் தலைமையில் இருந்து சொல்லியிருந்தனர். இப்போது, அவைகள் எல்லாவற்றையும் தொகுத்து அனுப்பி வைக்க கேட்டிருக்கின்றனர். அதையெல்லாம், மாநிலத் தலைமைக்கு வந்து சேர்ந்தும், விரைவில், கட்சியின் தேசிய தலைமைக்கு அனுப்பி வைப்பர். அவைகளை பார்த்துவிட்டு, மேலிடத்திலிருந்து அடுத்து வரும் உத்தரவுபடி, மாநிலத் தலைமை செயல்படும்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments