தமிழக மந்திரிகள் பெங்களூருவில் என்ன செய்கின்றனர்

பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டதை முன்னிட்டு பெங்களூரு சென்றிருந்த தமிழக அமைச்சர்கள், சிறை வளாகத்தில் உள்ளனர். அவர்களுக்கு பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஜெ., சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக்குவிப்பு, வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அனைவருக்கும் 4 வருட சிறைதண்டனை வழங்கப்பட்டதுடன், ஜெ.,க்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெ., சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண் 7402 ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு இரவு உணவாக, 200 கிராம் அரிசி, 200 சாம்பார், 2 சப்பாத்தி மற்றும் களி வழங்கப்பட்டது. களியை தவிர மற்ற உணவை ஜெ., சாப்பிட்டார். இதனிடையே, ஜெ., மீதான வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டதை முன்னிட்டு, பெங்களூரு சென்றிருந்த அமைச்சர்களுக்கு அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் அறைஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது வரை சிறை வளாகத்தில் தங்கியிருந்தனர்.

இதனிடையே, ஜெயலலிதாவுக்கு, பெங்களூருவிலிருந்து 48 கி.மீ., தொலைவில் உள்ள ஜெயதேவா என்ற இருதய ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படலாம் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Comments