பார்லிமென்ட்டில், லோக்சபா
எம்.பி.,க்கள் அனைவருக்கும், கம்ப்யூட்டர்கள் வழங்குவதை இறுதி செய்யும்
குழுவின் தலைவராக, திருச்சி தொகுதி எம்.பி., குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தவிர, துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு, மேலும் மூன்று குழுக்களின் தலைவர்
பதவிகள் கிடைத்துள்ளன.மத்திய அரசின் நிர்வாக நடவடிக்கைகளை
செம்மைப்படுத்துவதற்கு என, பார்லிமென்ட்டில் நிலைக்குழு உட்பட, நிறைய
குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
புதிய லோக்சபா அமைந்தவுடன், இந்த குழுக்களை
கைப்பற்றுவதில், அரசியல் கட்சிகள் இடையே பலத்த போட்டி இருக்கும். ஆனாலும்,
கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப, குழுக்கள் ஒதுக்கப்படும்.
லோக்சபா
எம்.பி.,க்களுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் குழு என்பது, மிகமிக சாதாரணமான
குழு. இந்த குழு, வருடத்தில் ஒருமுறை கூடினாலே பெரிய விஷயம். இந்த
கம்ப்யூட்டர் வழங்கும் குழுவை, கடந்த ஆட்சியில் துணை சபாநாயகர்
கரியமுண்டாவே வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில்,
நேற்று முன்தினம் இரவு, அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிவிப்பின் படி,
கம்ப்யூட்டர் வழங்கும் குழுவின் தலைவராக, குமார் நியமிக்கப்படுவது
தெரியவந்தது. அதோடு, துணை சபாநாயகரான தம்பிதுரை, பட்ஜெட் மதிப்பீட்டுக்
குழு, தொகுதி மேம்பாட்டு நிதிக்குழு, தனிநபர் மசோதா குழு என, மேலும் மூன்று
குழுக்களின் தலைவர் பதவிகளையும் வகிப்பார் எனவும், அதில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
Comments