சென்னையில் இருக்கும் குழந்தை வைத்திய நிபுணர்கள் அனைவரும்,
'குழந்தைகளுக்கு ஆவின் பால் கொடுங்க. அதில்தான், கலப்படம் இல்லாமல்
இருக்கிறது; குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களும் ஆவின் பாலில் உள்ளன'
என்று தாய்மார்களை வலியுறுத்த வந்தனர்.
பொறுப்பிலிருந்து நீக்கம்:
ஆனால்,
அப்படிப்பட்ட பாலிலும் தண்ணீர் கலந்து விற்பனைக்கு வந்த விவரம் வெளியாகி,
இப்போது, அந்த முறைகேட்டை தமிழக போலீசின் சி.பி.சி.ஐ.டி., பிரிவு போலீசார்
விசாரித்து வருகின்றனர்.இந்த முறைகேட்டில் ஈடுபட்டது, அ.தி.மு.க.,வில்
பொறுப்பில் இருந்த, சென்னை அசோக் நகரைச் வைத்தியநாதன் என்பதை கேள்விபட்டு,
தமிழக முதல்வர் வரையில் அதிர்ந்து போயினர். அதனால், அவரை உடனடியாக கட்சியை
விட்டு நீக்கினார் முதல்வர் ஜெயலலிதா. கூடவே, பால் வளத் துறை அமைச்சராக
இருந்த மாதவரம் மூர்த்தியையும், அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கி,
அதிரடி நடவடிக்கை எடுத்தார்.முதல்வர் இந்த விஷயத்தில் தீவிரமாக இருப்பதை
அறிந்ததும், சி.பி.சி.ஐ.டி., போலீசாரும், இந்த முறைகேட்டை கண்டறிவதில்
தீவிரமாக இருக்கின்றனர். முதல்கட்டமாக, ஆவினுக்கு பால் கொண்டு வரும்
போக்குவரத்து ஒப்பந்தத்தை எடுத்திருந்த, வைத்தியநாதன்தான், பாலில் தண்ணீர்
கலந்தார் என்பதை விசாரணையில் அறிந்து அவரை கைது செய்தனர்.
தொடர்ச்சியாக அவரிடம் விசாரித்ததில், ஒரு நாளைக்கு 66 ஆயிரம் லிட்டர் வரையில் பால் திருடப்பட்டது கண்டறியப்பட்டது. அதை கணக்கிட்டால், ஒரு வருடத்துக்கு, 72 கோடி வரையில் திருடப்பட்ட பால் மூலம் கொள்ளையடிக்கப்பட்டதும், தெரிய வந்தது.இதன் தொடர்ச்சியாக, வைத்தியநாதனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கும், சி.பி.சி.ஐ.டி., போலீசார், வைத்திய நாதன் அலுவலகம், வீடு போன்ற இடங்களில் அதிரடி சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.கூடவே, ஆவின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலரிடமும், இந்த கலப்பட விவகாரம் தொடர்பாக, போலீசார் விசாரித்ததில், பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது.
தொடர்ச்சியாக அவரிடம் விசாரித்ததில், ஒரு நாளைக்கு 66 ஆயிரம் லிட்டர் வரையில் பால் திருடப்பட்டது கண்டறியப்பட்டது. அதை கணக்கிட்டால், ஒரு வருடத்துக்கு, 72 கோடி வரையில் திருடப்பட்ட பால் மூலம் கொள்ளையடிக்கப்பட்டதும், தெரிய வந்தது.இதன் தொடர்ச்சியாக, வைத்தியநாதனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கும், சி.பி.சி.ஐ.டி., போலீசார், வைத்திய நாதன் அலுவலகம், வீடு போன்ற இடங்களில் அதிரடி சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.கூடவே, ஆவின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலரிடமும், இந்த கலப்பட விவகாரம் தொடர்பாக, போலீசார் விசாரித்ததில், பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிகாரிகளை மிரட்டி:
வைத்தியநாதன்
போலவே, திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் வேலுார் போன்ற இடங்களில்
இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பாலை, சென்னைக்கு கொண்டு வரும் பணியில்
ஈடுபட்ட, வட மாவட்டத்தைச் சேர்ந்த காந்தி என்பவரையும் பிடித்து, போலீசார்
விசாரித்து வருகின்றனர். அவருக்கும் 50க்கும் மேற்பட்ட, பால் ஏற்றி வரும்
டேங்கர் லாரிகள் இருந்ததும் கண்டறியப்பட்டது.அந்த லாரிகள் அனைத்தும்,
அந்தப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் சகோதரருக்கு
சொந்தமானது என்றும், சகோதரர் அமைச்சராக இருந்த காலத்தில், ஆவின் அதிகாரிகளை
மிரட்டி, பால் ஏற்றி வரும் ஒப்பந்தத்தை பெற்றதாகவும், விசாரணையில், தெரிய
வந்திருக்கிறது.இதைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக, முன்னாள் அமைச்சரின்
சகோதரரரையும் விசாரணைக்கு அழைக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார்
முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பதவி பறிப்பு:
வட
மாவட்டத்தைச் சேர்ந்த அந்த முன்னாள் அமைச்சர், அமைச்சரவையில் இடம்
பெற்றிருந்த போது, அமைச்சரின் இலாகாவில், இஷ்டத்துக்கும் சகோதரரை அதிகாரம்
செய்ய விட்டதாலேயே, அவர் பதவி பறிக்கப்பட்டதாக கூறப்பட்டது.இப்போது, ஆவின்
பால் கலப்பட விவகாரத்திலும், சகோதரர் சிக்கியிருப்பதால், தன் தலைக்கும்
மீண்டும் சிக்கல் வரும் என, அந்த முன்னாள் அமைச்சர் அஞ்சுவதாகவும்
சொல்லப்படுகிறது.
விசாரிக்க நீதிமன்றம் அனுமதி:
ஆவின் பால் திருடி, பல கோடி ரூபாய் குவித்ததாக கைதான வைத்தியநாதனிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க, 6 நாட்களுக்கு அனுமதி வழங்கி, விழுப்புரம் கோர்ட் உத்தரவிட்டது.ஆவின் நிறுவனம் மூலம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படும் பாலை திருடி வகையில், ஆண்டுக்கு 72 கோடி ரூபாய் வரை, சுருட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இதில், அ.தி.மு.க.,வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட, சென்னை அசோக் நகரைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து, அவரை போலீசார் கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை கிளை சிறையில் உள்ள வைத்தியநாதனை, ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, விழுப்புரம் தலைமை குற்றவியல் கோர்ட்டில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் மனு செய்தனர்.தலைமை குற்றவியல் நீதிபதி குமார் சரவணன் முன்னிலையில், நேற்று நடந்த விசாரணைக்குப் பின், வைத்தியநாதனை 6 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, வைத்தியநாதனை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
Comments