அதன் பின் ரஜினிகாந்த், ரவிக்குமார் இருவரும் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சென்னைக்கு வர உள்ளதால் படப்பிடிப்புக்கு சிறு இடைவெளி விடுகிறார்களாம். அடுத்து பாடல் காட்சிகளைப் படமாக்க ஐரோப்பா செல்வதுடன் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுகிறது. இதனிடையே படத்திற்கான கிராபிக்ஸ் வேலைகளும் பரபரப்பாக நடந்து வருகிறதாம்.
'லிங்கா' படத்தின் மூலம் மீண்டும் அசத்தலான வெற்றியைப் பெற வேண்டும் என்று ரஜினிகாந்த் உட்பட குழுவினர் அனைவரும் இடைவிடாது உழைத்து வருகிறார்கள். 'கோச்சடையான்' படத்தால் ரஜினி ரசிகர்கள் முழு திருப்தியடையாததால் 'எந்திரன்' படத்தை விட இன்னும் பெரிய அளவிற்கு 'லிங்கா' படத்தை வெற்றியடைய வைக்க வேண்டும் என நினைக்கிறார்களாம்.
ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி படம் கண்டிப்பாகத் திரைக்கு வந்துவிடும் என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளது.
Comments