ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், முக்கியமான வழக்குகளை விசாரிக்காமல், அமைச்சரின் செல்ல நாய்க் குட்டியை போலீசார் தேடினர்.
ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ராஜேந்திர ரத்தோர், சுகாதார அமைச்சராக பதவி வகிக்கிறார். இவர், ஜெய்ப்பூர் அருகேஉள்ள சோடாலா பகுதியில் வசிக்கிறார்.
இவர், பிறந்து 5 மாதமே ஆன, நாய்க்
குட்டியை வளர்த்து வருகிறார்.இந்த நாய்க் குட்டி, சமீபத்தில் காணாமல் போய்
விட்டது. இதனால், துடித்துப் போன ராஜேந்திர ரத்தோர், அந்த பகுதி முழுவதும்
தேடினார். ஆனால், நாய்க் குட்டி கிடைக்கவில்லை. இதையடுத்து, நாய்க்
குட்டியை கண்டுபிடித்து தரும்படி, சோனாலா போலீஸ் ஸ்டேஷனில் புகார்
அளித்தார். போலீசாரும், நாய்க் குட்டியை தீவிரமாக தேடி வந்தனர்; நாய்க்
குட்டி கிடைக்கவில்லை. ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ராஜேந்திர ரத்தோர், சுகாதார அமைச்சராக பதவி வகிக்கிறார். இவர், ஜெய்ப்பூர் அருகேஉள்ள சோடாலா பகுதியில் வசிக்கிறார்.
இந்நிலையில், சோனாலா பகுதியில் உள்ள முதியவர் ஒருவர், தெருவில் நின்று கொண்டிருந்த ஒரு நாய்க் குட்டியை பார்த்தார். மற்ற நாய்களை விட, வித்தியாச மாக இருந்த அது, பணக்காரர்கள் செல்லமாக வளர்க்கும் நாயாகத் தான் இருக்கும் என, கருதிய அவர், அந்த நாயை, தன் வீட்டுக்கு எடுத்து வந்தார். பின், அருகில் உள்ளவர் கள், 'இது, அமைச்சரின் நாயாக இருக்கலாம்' என, தெரிவித்தனர்.
இதையடுத்து, அமைச்சர் வீட்டுக்கு அந்த நாயை துாக்கி வந்து, வெளியில் நின்ற காவலாளியிடம் அதை கொடுத்து விட்டுச் சென்றார். தன், செல்ல நாய்க் குட்டி திரும்ப கிடைத்ததால், அமைச்சர் ராஜேந்திர ரத்தோர் சந்தோஷமடைந்தார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சியான காங்கிரசைச் சேர்ந்த தலைவர்கள், 'முக்கிய வழக்குகளை விசாரிக்காமல், அமைச்சரின் நாய்க் குட்டியை தேடுவதில், போலீசார், நேரத்தை செலவிட்டது, கண்டனத்துக்குரியது' என்றனர்.
Comments