பார்லிமென்ட்டின் நிலைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கான பெயர்கள், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. நிலைக் குழுக்களின் மொத்த எண்ணிக்கை 24. இதில் லோக்சபாவின் கீழ், 16 நிலைக்குழுக்களும், ராஜ்ய சபாவின் கீழ், எட்டு நிலைக்குழுக்களும் வரும்.
324 எம்.பி.,க்கள்: கட்சிகளின் பலத்திற்கு ஏற்ற வகையில், இந்த நிலைக் குழுக்களின் தலைவர் பதவிகள், ஒதுக்கப்படுவது வழக்கம். அதன்படி, பா.ஜ.,வுக்கு, லோக்சபாவில் 281 பேர், ராஜ்யசபாவில் 43 பேர் என மொத்தம், 324 எம்.பி.,க்கள் உள்ளனர்.இதன் அடிப்படை யில், ஒன்பது லோக்சபா நிலைக்குழுக்கள், இரண்டு ராஜ்யசபா நிலைக்குழுக்கள் என, 11 நிலைக்குழுக்கள், பா.ஜ., வசம் வந்துள்ளன.காங்கிரசுக்கு, லோக்சபாவில் 44 பேர், ராஜ்யசபாவில் 69 பேர் என, மொத்தம், 113 எம்.பி.,க் கள் உள்ளனர். இதன் அடிப்படையில், இரண்டு லோக்சபா நிலைக்குழுக்கள், மூன்று ராஜ்ய சபா நிலைக்குழுக்கள் என, மொத்தம் ஐந்து நிலைக்குழுக்கள் அந்த கட்சிக்கு கிடைத்துள்ளன.இந்த இரண்டு கட்சிகளுக்கும் அடுத்ததாக, வலுவான, ரயில்வே நிலைக்குழு மற்றும் போக்கு வரத்து, கப்பல், சுற்றுலா ஆகிய நிலைக்குழுக்களை கைப்பற்றி உள்ளது. இந்த கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, தினமும் மத்திய அரசை விமர்சித்தும், பா.ஜ.,வோடு கடும் மோதல் போக்கையும் கொண்டுள்ள நிலையில், இரண்டு வலுவான நிலைக்குழு தலைவர் பதவிகளை வாங்கி, ஆச்சரியத்தை தந்துள்ளார். அந்த கட்சியை சேர்ந்த தினேஷ் திரிவேதி, இப்போது ரயில்வே நிலைக்குழு தலைவர் ஆகியுள்ளார்.
34 பேர்: திரிணமுல் காங்கிரசுக்கு, லோக்சபாவில் 34 பேர், ராஜ்யசபாவில் 12 பேர் என, மொத்தமே 46 எம்.பி.,க்கள் தான் உள்ள னர். அ.தி.மு.க.,வுக்கு லோக்சபாவில் 37 பேர், ராஜ்யசபாவில் 11 பேர் என, மொத்தம் 48 எம்.பி.,க்கள் உள்ளனர். பார்லிமென்ட்டிலிலேயே மூன்றாவது பெரிய கட்சி யான அ.தி.மு.க., ஒரே ஒரு லோக்சபா நிலைக்குழு தலைவர் பதவியை மட்டுமே, பெற்றுள்ளது.கிராமப்புற மேம்பாட்டு நிலைக்குழுவுக்கு, அந்த கட்சியை சேர்ந்த வேணுகோபால் தலைமை வகிக்க உள்ளார். பகுஜன்சமாஜ், ஐக்கிய ஜனதாதளம் ஆகியவற்றுக்கு, தலா, ஒரு ராஜ்யசபா நிலைக்குழு தலைவர் பதவிகள் கிடைத்துள்ளன. சிவசேனா, தெலுங்குதேசம் ஆகிய கட்சிகளுக்கு, தலா ஒரு லோக்சபா நிலைக்குழு தலைவர் பதவிகளும் கிடைத்துள்ளன.பல்வேறு நிலைக்குழுக்களில், தமிழக எம்.பி.,க்கள் பலரும், உறுப்பினர்களாக, இடம் பிடித்துள்ளனர்.
*நிதித்துறையின் நிலைக்குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உறுப்பினராக
நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவுக்கு தலைவர், காங்கிரசின் மூத்த தலைவரான வீரப்பமொய்லி.
*தொலைத்தொடர்பு துறை நிலைக்குழுவில், அத்வானி ஒரு உறுப்பினர். இந்த குழுவுக்கு தலைவர், பா.ஜ.,இளைஞர் அணி தலைவரும், எம்.பி.யுமான அனுராக் தாக்கூர்.
நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவுக்கு தலைவர், காங்கிரசின் மூத்த தலைவரான வீரப்பமொய்லி.
*தொலைத்தொடர்பு துறை நிலைக்குழுவில், அத்வானி ஒரு உறுப்பினர். இந்த குழுவுக்கு தலைவர், பா.ஜ.,இளைஞர் அணி தலைவரும், எம்.பி.யுமான அனுராக் தாக்கூர்.
Comments