பெங்களூரு: செவ்வாய் கிரகத்தை ஆய்வு
செய்வதற்காக இஸ்ரோவால் கடந்த ஆண்டு ஏவப்பட்ட மங்கள்யான் விண்கலம், தனது
நீண்ட பயணத்தின் நிறைவாக, செவ்வாய் கிரகத்தின் வான்வௌிக்குள்
நுழைந்துள்ளது. இந்த விண்கலம், நாளை மறுநாள் செவ்வாயின் நீள்
வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இன்று நடந்த டெஸ்ட்பயர்
வெற்றிகரமாக முடிந்துள்ளது.
சிவப்பு கிரகமான செவ்வாயை ஆய்வு செய்வதற்காக, இந்தியாவின் விண்வௌி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, மங்கள்யான் என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி ஏவியது. கடினமான, நீண்ட பயணத்திற்கு பின்னர், மங்கள்யான் தற்போது செவ்வாயின் மிக நெருக்கத்தை எட்டி உள்ளது. மங்கள்யான் விண்கலத்தை, ஒரு பெரிய ராக்கெட்டும், எட்டு உந்துவிசை சிறிய மோட்டார்களும் உள்ளன. இந்த மோட்டார்கள் தற்போது செயல்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
4 நொடி டெஸ்ட்:
மங்கள்யான்
செவ்வாயை நெருங்கி உள்ள நிலையில், அந்த கலத்தை செவ்வாயின்
சுற்றுப்பாதையில் செலுத்த வேண்டும். அதற்காக இந்த மோட்டார்களை இயக்க
வேண்டும். அந்த பணியில் பெங்களூரு கட்டுப்பாட்டு அறையில் உள்ள பொறியாளர்கள்
ஈடுபட்டுள்ளனர். உந்துவிசை மோட்டார்கள் சரியாக வேலை செய்கின்றனவா என்பதை
கண்டறிய, நான்கு நொடிகளுக்கு மட்டும் அவை இயக்கப்பட்டன. இந்த முயற்சி
வெற்றி பெற்றால், செவ்வாய் கிரகத்திற்கு முதன் முதலாக வெற்றிகரமாக
விண்கலத்தை ஏவிய நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்பது
குறிப்பிடத்தக்கது.
ஏற்பாடுகள் தயார்:
இது
குறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், 'ராக்கெட் மோட்டார்களை
இயக்க 4 நொடி டெஸ்ட் பயர் செய்யப்படும். இதன் மூலம், மங்கள்யான் தனது
பாதையில் இருந்து கீழ்நோக்கி வரும். சரியான பாதையில் மங்கள்யானை நிலை
நிறுத்த தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளோம்,' என்றார்.
Comments