சென்னை: அ.தி.மு.க.,வும், மாநில தேர்தல் ஆணையரும், கூட்டணி அமைத்து, போலீஸ்
துறையின் துணையுடன் பெற்ற வெற்றிக்கு பட்டாசும், இனிப்பும் ஒரு கேடா?''
என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி, எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர், வெளியிட்ட அறிக்கை:
உள்ளாட்சி
இடைத்தேர்தல் நடந்த இடங்களில், அமைச்சர்கள் முகாமிட்டிருந்தனர். எதிரிகள்
கண்களுக்கு தெரியவில்லை என, முதல்வர் ஜெயலலிதா கூறிவிட்டு, விமானப் பயணம்
மேற்கொண்டு, தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.எங்கே தோற்று விட்டால்,
அமைச்சர் பதவி பறிக்கபடுமோ என்ற அச்சத்தால், அமைச்சர்கள், கணிசமாக
செலவழிக்க வேண்டிய நிலைக்கு, தள்ளப்பட்டனர். பதவி நீடித்தால், செலவழிப்பதை
மீட்டுக் கொள்ளலாம் என்ற தைரியம்.அ.தி.மு.க.,வும், மாநில தேர்தல் ஆணையரும்,
கூட்டணி அமைத்து கொண்டு, போலீஸ் துறையின் துணையோடு பெற்ற வெற்றிக்கு,
பட்டாசு, இனிப்பும் ஒரு கேடா? மல்யுத்த போட்டியில் எதிரிகள் அனைவரையும்
செயலிழிக்கச் செய்துவிட்டு, நடுவரையும் கைக்குள் போட்டுக் கொண்டு, வெற்றி
பெறுவது போலத்தான், தற்போது ஆளுங்கட்சி உள்ளாட்சி இடைத்தேர்தலில் பெற்ற
வெற்றியும். அதில் பெருளோ, பொருத்தமோ இல்லை.நிலைமைகள் இப்படியே
நீடிக்குமானால், ஜனநாயகத்தை அருங்காட்சியகத்தில் தான் காண நேரிடும்.
இடைத்தேர்தலில் வென்றது ஜனநாயகமா, பணநாயகமா?இவ்வாறு கருணாநிதி, தன் அறிக்கை
மூலம், கேட்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர், வெளியிட்ட அறிக்கை:
Comments