குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உடனேயே பெங்களூர் போலீசார் ஜெயலலிதாவை
தங்கள் பொறுப்பில் எடுத்தனர். இந்நிலையில் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதும்
அவர் பரப்பன அக்ரஹாராவில் அமைந்துள்ள பெங்களூர் மத்திய சிறைச்சாலையில்
அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக சிறைச்சாலை வளாகத்திலுள்ள
மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
அதேபோல, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் மருத்துவ பரிசோதனை
நடத்தப்பட்டது. அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜெயலலிதாவை சிறையில் அடைத்தது குறித்து அறிந்த அதிமுகவினர் கண்ணீர் விட்டு
அழுதனர்.
சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ளது பெங்களூரில் என்பதால் நீதிமன்ற எல்லைக்கு
உட்பட்ட சிறையில் ஜெயலலிதா உள்ளிட்ட மூவரும் அடைக்கப்பட்டுள்ளனர். எனவேதான்
சென்னை சிறைக்கு அழைத்து வரவில்லை என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெறும் வரை இந்த சிறையில் தான்
ஜெயலலிதா உள்பட 4 பேரும் அடைக்கப்பட்டிருப்பர். அது எத்தனை காலம்
ஆனாலும்...
Comments