சென்னை : சென்னையில், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய
போலீசார் "பிரீத் அனலைசர்' என்ற கருவி மூலம் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டில் இதுவரை 40 ஆயிரத்து 835 பேர் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டி
வந்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 4,560 பேரை கைது
செய்த போலீசார், அவர்களது ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக நீக்கும்படி
வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். 965 பேர்களின்
ஓட்டுனர் உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தகவல் சென்னை போலீஸ்
செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. போகிற போக்கை பார்த்தால்
சென்னையே குடிகாரர்கள் வாகனம் ஓட்டும் நகரமாக மாறி வருகிறதோ என
எண்ணத்தோன்றுகிறது.
Comments