அசாம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ அல்-கொய்தா திட்டம்: தருண் கோகெய் திடுக் தகவல்

கவுகாத்தி: அல்கொய்தா அமைப்பினர் அசாம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

அசாமில் முதல்வர் தருண்கோகெய் தலைமையில், காங். ஆட்சிநடக்கிறது.
இம்மாநிலத்தில் அல்பா என்ற தடை செய்யப்பட்டபிரிவினைவாத அமைப்பினர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் அல்கொய்தா அமைப்பின் தலைவர் அல்ஜவாகிரி, இந்தியதுணை கண்டத்தில் தங்கள் அமைப்பின் கிளையை துவங்க உள்ளதாக வீடியோ வாயிலாக மிரட்டல் விடுத்தார்.

அசாம் வழியாக ஊடுரு திட்டம்

இந்நிலையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் முதல்வர் தருண்கோகெய் கூறியதாவது, அல்கொய்தா அமைப்பினருடன், இம்மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட பிரிவினைவாத சக்திகளான அல்பா அமைப்புடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர். அவர்கள் மூலம் அல்கொய்தா அமைப்பினர் இந்தியாவிற்குள் , வரும் துர்காபூஜையன்று ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக, பாதுகாப்புப்படையினர், மற்றும் உளவுத்துறை மூலம் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. எனினும் மாநில அரசு இதனை தடுத்திட உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்,

ஏற்கனவே போடோலாந்து பகுதியில் இரு சமூகத்தினர் மோதல் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.இதனை பயன்படுத்தி அல்கொய்தா அமைப்பினர் அசாமில் ஊடுருவி நாசவேலை நடத்த திட்டமிடலாம்.இந்த விவகாரத்தில் மேலும் மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தருண் கோகெய் கூறினார்.

Comments