இஸ்லாமாபாத்: இந்திய துணைக் கண்டத்தில் அல்குவைதா கிளைகள் துவக்கப்படும் என
மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலால், இந்தியாவை காட்டிலும்,
பாகிஸ்தானுக்கு தான் அதிக ஆபத்து என்று பாக். அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், 'இந்தியாவில் இதுவரை அந்த பயங்கரவாத
அமைப்பிற்கு நெட் ஒர்க் கிடையாது. ஆனால், பாகிஸ்தானில் அந்த அமைப்பின் நெட்
ஒர்க் அதிகம், அல்குவைதா சார்ந்த இயக்கங்கள் அதிகம் உள்ளதால், முதலில்
பாகிஸ்தானில் தான் கால்பதிக்க அல்குவைதா முயலும், இதனால், உடனடி ஆபத்து
பாகிஸ்தானுக்கு தான்,' என்றனர். பாகிஸ்தானில் சமீபத்தில் துவக்கப்பட்டுள்ள
பயங்கரவாத அமைப்பான, தரீக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற (டிடிபி) அமைப்பு,
அல்குவைதா ஆதரவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments