மும்பை : மனைவியின், அபரிமிதமான, 'செக்ஸ்' ஆசையை பூர்த்தி செய்ய முடியாமல்,
களைப்படைந்த கணவன், கோர்ட்டில் விவாகரத்து பெற்ற சம்பவம் நடந்துள்ளது.
மும்பையை சேர்ந்த பெயர், முகவரி குறிப்பிடப்படாத இளைஞர், இந்த ஆண்டு ஜனவரியில், குடும்ப நல கோர்ட்டை அணுகி, மனு ஒன்றை அளித்தார். அதில், குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
எனக்கும், என் மனைவிக்கும், 2012ல் திருமணம்
நடந்தது. திருமணம் ஆன பிறகு தான் அவளுக்கு, செக்சில் அதிக ஆர்வம் இருப்பது
எனக்கு தெரிய வந்தது. அதிலும், இயற்கைக்கு மாறான செக்சில் அவள் அதிக
விருப்பம் கொண்டிருக்கிறாள்.தினமும் மூன்று முறை சேர்ந்த பிறகும் அவளுக்கு
திருப்தி கிடைப்பதில்லை. இதனால் என்னை, அசிங்கமாக பேசியும், திட்டியும்
வருகிறாள். எனக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தாலும், உடலுறவு வைத்துக்
கொள்ள கட்டாயப்படுத்துகிறாள்.அவளின் வேட்கையை என்னால் சரி செய்ய
முடியவில்லை.மும்பையை சேர்ந்த பெயர், முகவரி குறிப்பிடப்படாத இளைஞர், இந்த ஆண்டு ஜனவரியில், குடும்ப நல கோர்ட்டை அணுகி, மனு ஒன்றை அளித்தார். அதில், குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
குடல்வால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு, சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் என்னை அறிவுறுத்தினர். அந்த நாட்களில் கூட அவள் என்னை விடவில்லை. அவளின் அந்த தொந்தரவால், நான் களைப்படைந்து விட்டேன்.மனநோயாக இருக்கலாம் என கருதி, டாக்டரிடம் செல்லலாம் என அழைத்தால், வர மாட்டேன் என அடம் பிடிக்கிறாள். 'என்னைப் பற்றி யாரிடமாவது சொன்னால், கொன்று விடுவேன்' என, மிரட்டுகிறாள்.நான் செக்சுக்கு மறுத்தால், வேறு யாரிடமாவது சென்று விடுவேன் என மிரட்டுகிறாள். அவளிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.இவ்வாறு அந்த இளைஞர் கோரியிருந்தார். வழக்கு விசாரணைக்கு பல முறை அழைத்து, 'சம்மன்' அனுப்பிய பிறகும், அந்தப் பெண் ஆஜராகாததால், அவளின் கணவனுக்கு அவளிடம் இருந்து விவாகரத்து வழங்கி, குடும்ப நல கோர்ட் நீதிபதி, லட்சுமி ராவ், கடந்த வாரம் உத்தரவிட்டார்.
Comments