மேலும் அமைச்சர்கள் ஓபன்னீர் செல்வம் உள்ளிட்டோரும் ஜெயலலிதாவுடன்
வந்திருந்தனர். தீர்ப்பு முதலில் முற்பகல் 11 மணிக்கு வெளியாகும் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது பிற்பகல் 1 மணிக்குத் தள்ளிப் போனது.
அப்போதும் தீர்ப்பு வரவில்லை. மாறாக 3 மணிக்கு சற்று முன்புதான் தீர்ப்பு
வெளியானது.
தீர்ப்பு தாமதமானதாலும், முதல்வர் ஜெயலலிதா தனக்கு உடல் நிலை சரியில்லை
என்று கூறியதாகவும் அவர் மதிய உணவு சாப்பிடுவதும் தள்ளிப் போனது. உரிய
நேரத்தில் அவர் உணவு சாப்பிடவில்லை. தனக்கு சாப்பாடு தேவை என்றும் அவர்
கூறவில்லை. இதனால் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரும் கூட உணவு
சாப்பிடவில்லை.
மேலும் தீர்ப்பை அறியக் காத்திருந்த அதிமுகவினர் பலரும் கூட சாப்பிடாமல்
கோர்ட் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வெளியே காத்துக் கிடந்தனர்.
Comments