அமியோடிராபிக் லேட்டரல் ஸ்கிலிரோசிஸ் (ஏ.எல்.எஸ்.,) எனப்படும் நோய் நரம்புகளை பாதிக்கும்.
தோன்றிய விதம்:
அமெரிக்காவை
சேர்ந்த பேஸ்பால் வீரரும், ஏ.எல்.எஸ்., நோயாளியுமான பீட் பிராட்ஸ் முதன்
முதலில் ஐஸ் பக்கெட் சவாலை சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தி சமூக
வலைதளங்களில் வெளியிட்டார். பிராட்ஸ்க்கு இந்த யோசனையை அவரது நண்பர்
தெரிவித்துள்ளார். தற்போது உலகம் முழுவதும் வேகமாக இந்த சவால் பரவி
வருகிறது. இதன்மூலம் ஏ.எல்.எஸ்., தொண்டு நிறுவனத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய்
நன்கொடை குவிந்துள்ளது. இது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.கடந்த ஒரு
மாதத்தில் இந்த சவாலை ஏற்றுக்கொண்ட 10 லட்சத்துக்கும் அதிகமான வீடியோக்கள்
பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. 20 லட்சத்துக்கும் அதிகமாக
"ட்விட்' செய்யப்பட்டுள்ளது.
ஐஸ் நீரில் குளித்த பிரபலங்கள்:
அமெரிக்க
முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், ஹாலிவுட் நட்சத்திரம் டாம் குரூஸ், ஸ்டீவன்
பீல்பெர்க், பில் கேட்ஸ், ஷகிரா, கேடி பெர்ரி, லேடி ககா, உசைன் போல்ட்,
ஐஸ்டின் பைபர், மார்க் சூக்கர்பெர்க் மற்றும் கால்பந்து, பேஸ்பால் வீரர்கள்
என பல பிரபலங்கள் இந்த சவாலில் ஈடுபட்டுள்ளனர்.இந்தியாவில் அபிஷேக்
பச்சன், ரித்தேஸ் தேஷ்முக், பிபாஷா பாசு, ஹன்சிகா மோத்வானி, சானியா மிர்சா
மற்றும் இந்திய ஹாக்கி அணியினர் இதனை மேற்கொண்டனர்.
ரைஸ் பக்கெட் சவால்:
ஐஸ்
பக்கெட் சவாலை போல இந்தியாவில் ரைஸ் பக்கெட் சவால்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த மஞ்சு லதா (38) எனும்
பத்திரிகையாளர் ஏழை மக்களின் பசியை போக்கும் எண்ணத்துடன் இதை
அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த சவாலில் வறுமையில் வாடும் மக்களுக்கு ஒரு
பக்கெட் அரிசி அல்லது உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும். இந்த சவாலும் சமூக
வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.மஞ்சு லதா ஒரு பக்கெட் அரிசியை வழங்கிய
புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டார். கொடுக்கும் சக்தி படைத்தவர்கள்
மருந்து, கல்விச்செலவு என எதை வேண்டுமானாலும் வழங்கலாம் என கேட்டுக்
கொண்டுள்ளார். இந்த சவாலை ஏற்றுக் கொண்ட தெலுங்கானாவின் கரீம்நகரில் உள்ள
ஒரு கல்லூரி மாணவர்கள் 2,200 கிலோ அரிசியை கடந்த வாரம் தானமாக வழங்கினர்.
இந்த நடைமுறையின் வழியாக பல்வேறு உதவிகள் ஏழை மக்களை சென்றடைந்துள்ளன.
சர்ச்சை:
நோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் நன்கொடை கிடைக்கிறது என்றாலும் பல நாடுகளில் இதனை எதிர்க்கின்றனர். தண்ணீரை வீணாக்குகின்றனர் எனவும், விளம்பரம் தேடுகின்றனர் எனவும் சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும் குளிர்ந்த நீரை தலையில் ஊற்றுவதால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர். ஸ்காட்லாந்தில் ஒரு இளைஞர் இந்த சவாலை மேற்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
Comments