கட்சியின், ஆண்டு விழா பொதுக்கூட்டங்களை மையமாக வைத்து, தே.மு.தி.க.,
தலைவர் விஜயகாந்த் போட்ட திட்டம், மழையால், தவிடுபொடி
ஆகியுள்ளது.தே.மு.தி.க., 10ம் ஆண்டு துவக்க விழா, கடந்த 14ம் தேதி நடந்தது.
இதையொட்டி, 14 மற்றும் 15ம் தேதிகளில், அனைத்து மாவட்டங்களிலும், பொதுக்
கூட்டங்கள் நடத்த வேண்டும் என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஒவ்வொரு
மாவட்டத்திலும் நடக்கும் பொதுக்கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், பல்வேறு
அணி நிர்வாகிகள், கட்சியின் பேச்சாளர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தலைமை ஏற்று
பேச வேண்டும் எனவும், அவர் அறிவுறுத்தி இருந்தார்.இக்கூட்டங்களில் பேசும்
நிர்வாகிகள் பட்டியலையும், தே.மு.தி.க., தலைமை வெளியிட்டு
இருந்தது.முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மீதான தனிநபர் விமர்சனத்தை
கைவிட்டு, பிரச்னைகள் குறித்து ஆதாரப்பூர்வமான தகவல்களுடன்,
பொதுக்கூட்டத்தில் பேச வேண்டும் எனவும், கட்சியினருக்கு அவர் அறிவுரை
வழங்கினார். மத்திய புள்ளியல் துறை ஆய்வறிக்கையில், பொருளாதார வளர்ச்சியில்
தமிழகம் கடைசி இடத்தை பிடித்துள்ளது குறித்து, மறக்காமல் பேச வேண்டும் என,
விஜயகாந்த் அறிவுறுத்தி இருந்தார்.இதுபோன்ற செயல்பாடுகளால், சட்டசபைத்
தேர்தல் வரை, கட்சியினரை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என, கணக்குப்
போட்டிருந்த, விஜயகாந்தின் கணக்கை, மழை தவிடுபொடியாக்கியது.கடந்த 14
மற்றும் 15ம் தேதிகளில், பல மாவட்டங்களில் பெய்த மழையால், பொதுக்கூட்டங்கள்
நடக்கவில்லை.சில இடங்களில், மழையை மீறி பொதுக்கூட்டங்களை நடத்த
முயன்றபோதும், அவற்றை கேட்பதற்கு, கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் தயாராக
இல்லை. மீறி நடந்த பொதுக்கூட்டங்களில், பெரிதாக கூட்டம் இல்லை.இதனால்
விஜயகாந்த், 'அப்செட்' ஆகி இருப்பதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments