கச்சா எண்ணெய்:
பெட்ரோல்
மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு கைவிட்டதை அடுத்து, சர்வதேச கச்சா
எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், 15 நாட்களுக்கு ஒருமுறை,
பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், டீசலுக்கான
மானியத்தையும் குறைத்து, சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ற வகையில்,
அதன் விலையையும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கும்
சூழ்நிலையை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டது.அதனால், டீசலின் உள்நாட்டு
விற்பனை விலைக்கும், சர்வதேச விலைக்கும் உள்ள வேறுபாட்டை நீக்க, ஒவ்வொரு
மாதமும், 50 காசுகள் அளவுக்கு டீசல் விலையை உயர்த்தும் முடிவை, முந்தைய
ஐ.மு., கூட்டணி அரசு எடுத்தது. அதன்படி, கடந்த சில மாதங்களாக, டீசல் விலை
படிப்படியாக உயர்த்தப்பட்டது.இந்த விலை உயர்வால், சர்வதேச கச்சா எண்ணெய்
விலை நிலவரங்களுக்கும், உள்நாட்டு விற்பனை விலைக்கும் இடையேயான வேறுபாடு,
முற்றிலும் குறைந்தது. சமீப நாட்களாக, டீசல் விற்பனையில், பொதுத் துறை
எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பை சந்திப்பது தவிர்க்கப்பட்டது.
எதிர்பார்ப்பு:
எனவே,
பெட்ரோலைப் போல, டீசல் மீதான விலை கட்டுப்பாட்டையும், மத்திய அரசு,
விரைவில் கைவிடலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இது, அரசியல்
ரீதியாக எடுக்க வேண்டிய முடிவு. இந்த ஆண்டு இறுதியில், சில மாநிலங்களில்,
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்குப் பின், இது தொடர்பான முடிவு
எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.இந்நிலையில், சர்வதேச சந்தையில்,
கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை, தற்போது, 100 டாலருக்கு (6,000 ரூபாய்) கீழ்
குறைந்துள்ளதாலும், ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளதாலும், பொதுத் துறை
எண்ணெய் நிறுவனங்களுக்கு, டீசல் விற்பனையால் ஏற்படும் இழப்பு குறைந்து,
உபரி வருவாய் பெறும் சூழ்நிலை உள்ளதால், கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத
வகையில், டீசல் விலை விரைவில் குறைக்கப்படலாம் என, நம்பப்படுகிறது.அனேகமாக,
அடுத்த வாரம் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரலாம். இது தொடர்பான
பரிசீலனையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக, அந்த
அமைச்சகத்தின் உயரதிகாரிகள் சிலர் தெரிவித்து உள்ளனர்.
Comments