வாஜ்பாய் காலத்தில் இருந்தே இந்திய- ஜப்பான் உறவு வலு பெற துவங்கியது. ஜப்பான் இந்தியாவை திரும்பி பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் கொள்கைகள் ஜப்பான் பின்பற்றுகிறது. ஜப்பான் மாடலை குஜராத்தில் கொண்டு வர நான் முதல்வராக இருந்தபோது கடும் முயற்சிகள் மேற்கொண்டேன். ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு இந்தியாவை தவிர சிறந்த நாடு எதுவும் இல்லை. வெளிநாட்டினர் முதலீட்டுக்கு இந்தியா உகந்த புவியியல் சூழல் பெற்றுள்ளது. ஜப்பான் முதலீட்டாளர்கள் இந்தியா நோக்கி வாருங்கள். மேட் இன் ஜப்பான் என்பது மேக் இன் இந்தியா என்று பிராண்டுகள் மாற வேண்டும் என்பது எனது விருப்பம்.
இந்தியாவில் தயாராகும் பொருட்களை ஜப்பான் போல சந்தைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம். ஜப்பான் ஹார்டுவேர் துறையில் சிறந்து விளங்குகிறது. இந்தியார் சாப்ட்வேர் துறையில் வலுவாக விளங்குகிறது. பாதுகாப்பு துறையில் உற்பத்தி மற்றும் முலீட்டில் நாங்கள் பல எளிமைபடுத்தியுள்ளோம். இந்தியாவில் சிவப்பு அளவீடு எதுவுமில்லை. ஆனால் முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க தயாராக இருக்கிறோம். முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சட்ட நெறிமுறைகள் தளர்த்தயுள்ளோம். முதலீட்டாளர்கள் தொழில் துவங்குவதற்கு ஏற்ற அரசியல் மற்றும் வர்த்தக சூழ்நிலை, தேவை ஆகியவை இந்தியாவில் உள்ளன. இவ்வாறு மோடி பேசினார்.
புத்தர் பிறந்த மண் :
மற்றொரு நிகழ்ச்சியில் பேசுகையில், ஜனநாயகம், பாதுகாப்பு கொண்டது இந்தியா. அமைதிக்காக வாழ்ந்த புத்தர் பிறந்த மண் இந்தியா. எங்கள் நாட்டில் பெண்கள் முன்னேற்றத்திற்கு மிக முக்கியத்துவம் அளிக்கிறோம். எங்கள் அமைச்சரவையில் பெண்கள் 25 சதவீதத்தினர் இடம்பெற்றுள்ளனர். வெளியுறவு துறை அமைச்சரும் ஒரு பெண்ணே. இவ்வாறு அவர் பேசினார்.
Comments