கோல்கட்டா: வட மாநிலங்களில் பலரது பணத்தை ஸ்வாகா செய்த சாரதா
சிட்பண்ட் வழக்கில் மேற்குவங்க முதல்வர் மம்தாவும் சிக்குவாரா என்ற
பரபரப்பு கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ., மம்தாவை விசாரிக்க
வேண்டும் என இடதுசாரிகள் வலியுறுத்தியுள்ளன.
பொதுமக்களிடம் பணம் வசூலித்து முதிர்வு பெறும் காலத்தில் பல மடங்கு பணம் தருவதாக பொய்யான வாக்குறுதி கொடுத்தது. ஆனால் 2013 ஏப்ரலில் இந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதனால் பல முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இழந்தனர். இது தொடர்பாக சி.பி.ஐ., சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி விசாரித்து வருகிறது.
இந்நிலையில் மம்தாவுக்கு தலைவலி வந்துள்ளது. இவர் ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது பிரபல சாராதா நிறுவனத்திற்கு ரயில்வேயுடன் இணைந்து டூர் மற்றும் உணவு பரிமாற்றம் தொடர்பான கான்ட்ராக்ட் வழங்கப்பட்டது. 2010ல் ஐ.ஆர்.சி.டி.சி., - சாரதா குரூப் பேர்ம் இணைந்து ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிறுவனம் நாடு முழுவதும் உள்ள யாத்திரை தலங்களுக்கு பக்தர்களை அழைத்து செல்வது. அவர்களுக்கு உணவு தயாரிக்கும் கேட்டரிங் ஆகியன எடுத்து செய்து வந்தது. இதற்கான பாரத்தீர்த் திட்டம் என மம்தா தனது 2010-11 ரயில்வே பட்ஜெட்டில் அறிமுகம் செய்தார். இந்த திட்டத்திற்கு 18 சிறப்பு ரயில்கள் ஒதுக்ககப்பட்டன.
சாரதா சிட்பண்ட் போல் இந்த திட்டத்திலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும், மம்தாவுக்கும், இந்த நிறுவனத்திற்கு எந்த மாதிரியான டீலிங் இருந்தது என இது தொடர்பாக மம்தாவை சி.பி.ஐ., விசாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சி.பி.ஐ.,வட்டாரம் தெரிவிக்கிறது.
Comments