கோவை: சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும்
அ.தி.மு.கவுக்கே சாதகமாக முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்த
தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என தி.மு.க., தலைவர் கருணாநிதி
அறிவித்து ஒதுங்கி கொண்டார். எதிர்க்கட்சியான தே.மு.தி.க., பா.ஜ., கட்சி
வேட்பாளர்களை பொது வேட்பாளராக அறிவித்தது.
விஜயகாந்த் பிரசாரம் ஏதுவும்
செய்யவில்லை. முக்கிய பொறுப்புக்களான கோவை, தூத்துக்குடி மேயர் மற்றும்
நகராட்சி தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர்கள வெற்றி பெறும் நிலையில்
உள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு
வருகின்றன.
தூத்துக்குடி மேயர் அ.தி.மு. க., வெற்றி : தூத்துக்குடி மேயர்
தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் கிரேசி வெற்றி பெற்றுள்ளார். இறுதிச்
சுற்று முடிவில் அ.தி.மு.க., வேட்பாளர் கிரேசி ஒரு லட்சத்து 16ஆயிரத்து 593
ஓட்டுகளும் , பாஜ., வேட்பாளர் ஜெயலட்சுமி 31 ஆயிரத்து 708 ஓட்டுகளும்
பெற்றுள்ளனர். வித்தியாசம்; 84 ஆயிரத்து 885 ஓட்டுக்கள். மொத்தம் இங்கு
ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 507 ஓட்டுக்கள் பதிவானது. முதலில் எண்ணப்பட்ட
தபால் ஓட்டுக்களில் மொத்தம் பதிவான 46 ஓட்டுக்களில் 36 ஓட்டுக்கள் செல்லாத
ஓட்டுக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தபால் ஓட்டு எண்ணிக்கையில் அதிமுக 6
ஓட்டுக்களும், பா.ஜ., 3 ஓட்டுக்களும் பெற்றுள்ளன.கோவை மேயர் : கோவை மேயர் தேர்தலில் 10வது சுற்று முடிவில் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார் 2 லட்சத்து 30 ஆயிரத்து 693 ஓட்டுக்களும், பாஜ., வேட்பாளர் நந்தகுமார் 74 ஆயிரத்து 38 ஓட்டுக்களும், பெற்றனர். வித்தியாசம்; ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 601.
மதுரை4 வது வார்டு : மதுரை மாநகராட்சி 4வது வார்டு இடைத் தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகம் 4 ஆயிரத்து 900 ஓட்டு.பெற்று வெற்றி பெற்றார். அடுத்து வந்த மார்க்சிஸ்ட் அர்ச்சுணன் ஆயிரத்து 966 ஓட்டு பெற்றார்.
காயல்பட்டனத்தில் அ.தி.மு.க,. தோல்வி: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டனத்தில் நடந்த நகராட்சி 1வது வார்டு தேர்தலில் அ.தி.மு.க., தோல்வியடைந்துள்ளது.
நகராட்சியிலும் அ.தி.மு.க., : நகராட்சிகளுக்கான தேர்தலில் கடலூர், விருத்தாச்சலம், ராமநாதபுரம் , நகராட்சிகளை கைப்பற்றியுள்ளன.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி தேர்தலில் அதிமுக. வேட்பாளர் சந்தான லட்சுமி 20 ஆயிரத்து 154 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அடுத்து வந்த ப.ஜ., வேட்பாளர் துரைச்சாமி 7 ஆயிரத்து 385 ஓட்டுகள் பெற்றுள்ளார்.
கடலூர்: கடலூர் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த குமரன், 63,550 ஓட்டுக்கள் பெற்று, வெற்றி பெற்றார். துரைமுக செல்வம், பா.ஜ., 4954 ஓட்டுக்களும், மாதவன் இ.கம்யூ., 6292 ஓட்டுக்களும் பெற்றனர். சுயேச்சையாக போட்டியிட்ட ராமச்சந்திரன் 1034 ஓட்டுக்கள் பெற்றார். இந்த நகராட்சியில், மொத்தம் 75,330 ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன.
விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அருள் அழகன் 29,148 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் சரவணன் 3651 ஓட்டுக்கள் பெற்றார்.
இந்த நகராட்சியின் 26வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அருண், 933 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா,.ஜ., வேட்பாளர் முருகன், 119 ஓட்டுக்கள் பெற்றார்.
Comments