பேய் பிடித்த மகளுக்கு நாயுடன் திருமணம் : ஜோதிடத்தால் விநோதம்

ராஞ்சி: மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறிய கிராமத்தினரின் சந்தோசத்திற்காக பெற்றோர் அவரை நாய்க்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்தது.ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த 18 வயது இளம்பெண மங்லிமுண்டா. இவரின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் கொண்ட கிராமத்தினர் இவருக்கு பேய் பிடித்திருப்பதாகவும் இதனால் கிராமத்திற்கு ஆபத்து எனவும் பெற்றோரிடம் கூறினர்.,
உடனே பெண்ணின் பெற்றோர் கிராமத்தை காப்பாற்ற ஜோதிடர்களின் அறிவுரைப்படி நாயுடன் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர்.திருமண விழாவிற்கான ஏற்பாடுகள்நடைபெற்றது. மணமகனான ஷெரு என்ற நாயை கிராமத்தினர் காரில் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி போன்று ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர் திருமண அரங்கில் மணமகள் மங்லிமுண்டாவிற்கும்,ஷெருவிற்கும் (நாய்) பாரம்பரிய முறைப்படி மங்கல இசையுடன்திருமணம் நடத்தி வைத்தனர். . திருமணத்தில் 70-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அறுசுவை விருந்து,என திருமண விழா அமர்களப்பட்டது.

இந்த வினோத திருமணம் குறித்து கருத்து தெரிவித்த மங்லி முண்டா முதலில் தனக்கு இத்திருமணத்தில் உடன் பாடில்லாமல் இருந்தது எனவும்,பின்னர் பெற்றோர் மற்றும் கிராமத்தினரின் சந்தோசத்தை கருத்தில் கொண்டு சம்மதித்ததாகவும் கூறினார். இனி தனக்கு அமைந்த வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்த போவதாக தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் இப்பகுதியில் இது போன்ற நிகழ்ச்சிகள் இது முதல்முறையல்ல எனவும் ஏற்கனவே இது போல் நான்கு அல்லது ஐந்து வினோத சம்பவங்கள் நடந்துள்ளதால் தான் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Comments