இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சுப்பிரமணியன்
சுவாமி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. பொதுமக்களுக்கு
பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே ஜனாதிபதி ஆட்சியை இரு
மாதங்களுக்கு தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, விஜயகாந்த் கூறுகையில், "தமிழகத்தில் போலீசார் கலவரங்களை
தடுக்கவில்லை. எனவே மத்திய பாதுகாப்பு படையை தமிழகத்துக்கு அனுப்ப
வேண்டும்" என்றார்.
Comments