சென்னை: கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா
விடுதலை செய்யப்படும் வரை சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள
எம்.ஜி.ஆர். சமாதியில் அதிமுக தொண்டர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில்
குதித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி உள்ளது. இங்கு அதிமுக
தொண்டர்கள் ஏராளமானோர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
எங்களது நிரந்தர முதல்வர் அம்மாதான். அவரை விடுதலை செய்யும் வரை போராட்டம்
தொடரும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு அதிமுகவினரிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது. பலரும்
போராட்டத்தில் இணைந்து வருகின்றனர். இதனால் புதிய பரபரப்பு
கிளம்பியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் நேற்று ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை
விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக பெங்களூர் சிறையில்
அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments