பயஸ் ஜோடி சாம்பியன்

Leander Paes, tennis
கோலாலம்பூர்:  
கோலாலம்பூரில், மலேசிய ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் பயஸ், போலந்தின் மார்சின் மட்கோவ்ஸ்கி ஜோடி, பிரிட்டனின் ஜமி முர்ரே, ஆஸ்திரேலியாவின் ஜான் பீர்ஸ் ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை 3–6 என இழந்த பயஸ் ஜோடி, பின் எழுச்சி கண்டு ‘டை–பிரேக்கர்’ வரை சென்ற 2வது செட்டை 7–6 எனக் கைப்பற்றியது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் ‘சூப்பர் டை–பிரேக்கரில்’ 10–5 என வென்றது. முடிவில் பயஸ்–மார்சின் ஜோடி 3–6, 7–6, 10–5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

நிஷிகோரி சாம்பியன்:

ஒற்றையர் பிரிவு பைனலில், ஜப்பானின் கெய் நிஷிகோரி, பிரான்சின் ஜூலியன் பென்னடியுவை 7–6, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார்.

Comments