மேற்கு வங்கம் ஹூக்ளி, பங்குரா, மித்னாபூர், ஹவுரா. கவுடா, பகுவாடா மாவட்டங்களைச் சேர்ந்த 78 பேர் தென் மாநிலங்களில் ஆன்மிக சுற்றுலாவுக்காக ஆக., 22ல் புறப்பட்டனர். 80 இருக்கைகள் கொண்ட பஸ்சில் திருப்பதி, புதுச்சேரி, சென்னை, மகாபலிபுரம் உட்பட 15க்கும் மேற்பட்ட தலங்களுக்கு சென்று விட்டு, ஆக., 29 இரவு ராமேஸ்வரம் வந்தனர்.மறுநாள் காலை தரிசனம் முடித்து, மதியம் தனுஷ்கோடி சென்றனர். அங்கு சாப்பிட்டு விட்டு, மாலையில் கன்னியாகுமரி புறப்பட்டனர். வழியில் இரவு உணவை முடித்து, கிழக்குக் கடற்கரைச் சாலையில் (இ.சி.ஆர்., ) பஸ் சென்றது.
5 பேர் கருகிய பரிதாபம்:
ராமநாதபுரம்,
திருப்புல்லாணி அருகே தாதனேந்தல்பகுதியில் இரவு 11.15 மணிக்கு, இயற்கை
உபாதை கழிக்க பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது, பஸ்சின் கடைசி இருக்கையில்
இருந்தவர்கள், 'ஏதோ கருகிய வாசனை வருகிறது' என்றனர்.பஸ்சின் பின்புறத்தில்
சமையல் பொருட்கள், பாத்திரங்களுடன் மூடிய பெட்டியில் இருந்த சிலிண்டரில்
காஸ் கசிவது தெரிந்தது. விபரீதம் உணர்ந்து அனைவரும் கீழே இறங்குவதற்குள்
சிலிண்டர் வெடித்தது. இதில், ஹூக்ளி மாவட்டம் கனாடியா விஸ்வநாத மண்டேல்,
78, சவுதா விஸ்வநாத தாஸ், 68, மீராபூர் கோபால் சந்துரு பாக்லி, 70,
காரிபூர் துர்கா சோம்தே, 45, பக்குவடா மாவட்டம் வததேபூர் மாலதி நய்கால்,
60, ஆகியோர் உடல் கருகி இறந்தனர். பஸ் உருக்குலைந்தது.காயம் அடைந்தோர்:
கோபால் சந்துரு பாக்லி மனைவி காயத்ரி பாப்லி, 50, சுபல் பால் மனைவி குபு
ஈரானி, 55, நிகர் சந்திர பவுல் மனைவி பிஜூ பியா பவுல், 50, போத்தமனால், 65,
சக்தி போத்தா சோப்ரா, 65, சவுதா பகுதியைச் சேர்ந்த சைலேந்திரி ராகா மகன்
சூர்ய ராகா, 26, ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும்
மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
ராமநாதபுரம், ஏர்வாடி பகுதிகளைச் சேர்ந்த 3 தீயணைப்பு வாகனங்களில் 15 வீரர்கள் மூன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். டி.எஸ்.பி.,க்கள் அண்ணாமலை ஆழ்வார், சிவசங்கர், கோட்ட தீயணைப்பு அலுவலர் சரவணக்குமார், நிலைய அலுவலர்கள் சாமிராஜ், தசரதன் தலைமையில் மீட்பு பணி நடந்தது.விபத்து ஏற்பட்டதும் தப்பி ஓடிய டிரைவர், பஸ் மேற்பார்வையாளரை போலீசார் தேடிவருகின்றனர். மீட்பு பணியில் போலீசார், தீயணைப்பு வீரர்களுக்கு தன்னார்வலர்கள் உதவினர்.
ராமநாதபுரம், ஏர்வாடி பகுதிகளைச் சேர்ந்த 3 தீயணைப்பு வாகனங்களில் 15 வீரர்கள் மூன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். டி.எஸ்.பி.,க்கள் அண்ணாமலை ஆழ்வார், சிவசங்கர், கோட்ட தீயணைப்பு அலுவலர் சரவணக்குமார், நிலைய அலுவலர்கள் சாமிராஜ், தசரதன் தலைமையில் மீட்பு பணி நடந்தது.விபத்து ஏற்பட்டதும் தப்பி ஓடிய டிரைவர், பஸ் மேற்பார்வையாளரை போலீசார் தேடிவருகின்றனர். மீட்பு பணியில் போலீசார், தீயணைப்பு வீரர்களுக்கு தன்னார்வலர்கள் உதவினர்.
காஸ் சிலிண்டரால் விபரீதம்:
பயணிகள், சமையலுக்காக வீட்டு இணைப்பு காஸ் சிலிண்டர்களை கொண்டு
வந்திருந்தனர். பஸ்சில் வந்த சிலர் சிகரெட் துண்டை அணைக்காமல் வெளியே
வீசியுள்ளனர். அதே நேரத்தில் சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. பலத்த
காற்றால் பரவிய சிகரெட் தீப்பொறி, காஸ் பட்டதும் வெடித்து சிதறியது.
மொத்தம் எட்டு சிலிண்டர்களில் இரண்டில் காஸ் இருந்தது. இதில் ஒன்றில் காஸ்
கசிந்து விபரீதம் ஏற்பட்டது.
நள்ளிரவில் ஓலம்:
விபத்து நிகழ்ந்த தாதனேந்தலில் இரவு 11:45 முதல் அதிகாலை 3 மணி வரை மரண ஓலம் கேட்டது. காயம் அடைந்தோர் ஒரு புறம், பலியானோரின் உறவினர்கள் மறுபுறம் கதறினர். மொழிப் பிரச்னை: சுற்றுலா வந்தவர்கள் வங்காள மொழி பேசியதால், பலியானவர்களின் விபரம் சேகரிப்பதில் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது. டி.எஸ்.பி., அண்ணாமலை ஆழ்வார் வங்காள மொழியில் பேசி விபரங்களை சேகரித்தார்.
பள்ளியில் தஞ்சம்:
டிரைவர், மேற்பார்வையாளர் உட்பட 80 பேர் வந்த பஸ்சில் 69 பேர் காயம் இன்றி தப்பினர். இவர்கள் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம், பொதுநல அமைப்புகள் சார்பில் உணவு வழங்கப்பட்டது. 69 பேரும் சென்னையில் இருந்து ரயிலில் சொந்த ஊர் அனுப்பப்பட உள்ளனர்.இறந்த 5 பேரில் விஸ்வநாததாஸ் என்பவரது உடல் மட்டும் ராமநாதபுரம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மற்ற நால்வரது உடல்களும் மாரியம்மன் கோயில் திடலில் எரியூட்டபட்டு அவர்களது அஸ்தியை அவர்களது உறவினர்களிடம் போலீசார் வழங்கினர்.
Comments