உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பான தகவல்களை வெளியிடுவதில், தேர்தல் கமிஷன்
வெளிப்படை தன்மை இல்லாமல் நடந்து கொள்வதாக, புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், 1,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல், செப்., 18ம் தேதி நடக்கிறது.மனு தாக்கல் செய்ய கால அவகாசம் குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது என்பது உட்பட தேர்தல் கமிஷன் மீது, பல்வேறு காரணங்களை கூறி, இத்தேர்தலை தி.மு.க., புறக்கணிப்பதாக, அக்கட்சித் தலைவர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்து விட்டார்.
பா.ம.க., - -ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல்
புறக்கணிப்பு முடிவை அறிவித்துள்ளன.வழக்கமாக ஆளும்கட்சியின் நடவடிக்கைகள்
மீது சந்தேகம் எழுப்பி, தேர்தலை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள், இம்முறை
மாநில தேர்தல் கமிஷன் மீது, சந்தேகத்தை கிளப்பியுள்ளன. தேர்தல் கமிஷனின்
வெளிப்படையற்ற தன்மையே இதற்கு காரணம் என, சொல்லப்படுகிறது. தேர்தல் தேதி
அறிவித்ததில் இருந்தே, பல்வேறு தகவல்களை, மாநில தேர்தல் கமிஷன் மறைக்கிறது
என்ற புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், 1,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல், செப்., 18ம் தேதி நடக்கிறது.மனு தாக்கல் செய்ய கால அவகாசம் குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது என்பது உட்பட தேர்தல் கமிஷன் மீது, பல்வேறு காரணங்களை கூறி, இத்தேர்தலை தி.மு.க., புறக்கணிப்பதாக, அக்கட்சித் தலைவர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்து விட்டார்.
அரசியல் கட்சிகளால், மாநில தேர்தல் கமிஷன் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் விவரம்:
*மாநிலம் முழுவதும், எவ்வளவு இடங்களில், தேர்தல் நடக்கிறது என்ற விவரங்கள், அதிகாரபூர்வமாக இதுவரை வெளியிடப்படவில்லை. ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, எவ்வளவு இடங்களில் தேர்தல் நடக்கிறது என்பது இதுவரை தெரியவில்லை.
*வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு குறைந்த கால அவகாசமே அளிக்கப்பட்டது. மனு தாக்கல் முடிந்த பிறகு, மனுக்கள் மீதான பரிசீலனை, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு ஆகியவை, எப்போது நடக்கும் என்பது அறிவிக்கப்படவில்லை.
*ஒவ்வொரு நாளும், எவ்வளவு வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்கின்றனர் என்ற விவரங்களையும், மாநில தேர்தல் கமிஷன் வெளியிடுவதை, தவிர்த்து வருகிறது.
இதுகுறித்து, தேர்தல் கமிஷன் வட்டாரங்களில் விசாரித்தால், 'அப்படி எந்த தவறும் தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளில் இல்லை. தேர்தல் முறையாக, நேர்மையாக நடத்தப்படும்' என்று மட்டும் சொல்கின்றனர்.
Comments