சென்னையில் ஜெ.வின் போயஸ் தோட்டம் இல்லம் முன்பு அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி!

View image on Twitterசென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைக் கண்டித்து சென்னையில் அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 18 ஆண்டுகாலம் இழுத்தடிக்க ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று அவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வன்முறைகள் வெடித்துள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கிப் போயுள்ளது. இந்த நிலையில் சென்னையில் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டு முன்பு அதிமுக தொண்டர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றார்.
அப்போது அருகில் இருந்த அதிமுக நிர்வாகிகள் அவரைத் தடுத்த நிறுத்த கடுமையாகப் போராடினர். ஆனாலும் அந்த நபர் தீக்குளிக்க மீண்டும் மீண்டும் முயற்சித்தார். ஒருவழியாக பெரும் போராட்டத்துக்குப் பின்னர் அந்த நபர் அங்கிருந்து அகற்றப்பட்டார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

Comments