ஜம்மு காஷ்மீர் மாநிலத் தில், கடந்த சில நாட்களாக, மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதியில், வரலாறு காணாத வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின், 90 சதவீத பகுதிகள், தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதுவரை, 200 பேர் உயிரிழந்து விட்டதாக அஞ்சப்படுகிறது. அவர்களின் வீடுகளும், உடைமைகளும் பறிபோய் விட்டன; ஏராளமானோரை காணவில்லை.
முழு வீச்சில் மீட்பு பணி:
ராணுவம்,
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், துணை ராணுவப் படையினர், போலீசார்
உள்ளிட்ட, 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர், முழு வீச்சில் மீட்பு பணிகளை
மேற்கொண்டு வருகின்றனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு, விமானங்கள்,
ஹெலிகாப்டர்கள் மூலம், உணவுப் பொருட்கள், தண்ணீர் பாக்கெட், மருந்துகள்
வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான பகுதியில்,
நேற்றும் பலத்த மழை பெய்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, வெள்ளக் காடாக
காட்சி அளிக்கிறது.ஸ்ரீநகர், நாட்டின் மற்ற பகுதி களுடன் முற்றிலும்
தனித்து விடப்பட்டு, தீவாகி விட்டது. வெள்ளப் பாதிப்பு பகுதிகளில், நான்கு
லட்சம் பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.நேற்றும், ஏராளமானோரை,
ராணுவத்தினர் மீட்டனர். உதாம்பூர் பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில்,
30 பேர் மண்ணுக்குள் புதைந்து விட்டதாக, மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், நேற்று மீட்பு குழுவினர், தங்கள்
கவனத்தை திருப்பினர்.
மீட்பு பணிகள் குறித்து, ராணுவ உயரதிகாரி சேட்டன் கூறியதாவது:படகுகளில் சென்று, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகிறோம். ஒரு சுற்றுக்கு, 1,000 பேர் மீட்கப்படுகின்றனர். இன்று மட்டும், 5,000 சுற்றுக் கள், மீட்பு பணிகள் நடந்துஉள்ளன. குறிப்பிட்ட பகுதியில், யாரும் சிக்கயிருக்கவில்லை என்பதை உறுதி செய்தபின்பே, அடுத்த இடத்துக்கு மீட்புக்கு செல்கிறோம்.'சாட்டிலைட் நெட்ஒர்க்' மூலம், ஓரளவு தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ரஜோரி, பூஞ்ச், டோடா உள்ளிட்ட பகுதிகளில், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மீட்பு பணிகள் குறித்து, ராணுவ உயரதிகாரி சேட்டன் கூறியதாவது:படகுகளில் சென்று, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகிறோம். ஒரு சுற்றுக்கு, 1,000 பேர் மீட்கப்படுகின்றனர். இன்று மட்டும், 5,000 சுற்றுக் கள், மீட்பு பணிகள் நடந்துஉள்ளன. குறிப்பிட்ட பகுதியில், யாரும் சிக்கயிருக்கவில்லை என்பதை உறுதி செய்தபின்பே, அடுத்த இடத்துக்கு மீட்புக்கு செல்கிறோம்.'சாட்டிலைட் நெட்ஒர்க்' மூலம், ஓரளவு தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ரஜோரி, பூஞ்ச், டோடா உள்ளிட்ட பகுதிகளில், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நெடுஞ்சாலை திறப்பு:
இதற்கிடையே,
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சேதமடைந்திருந்த, லடாக்கை, காஷ்மீர்
பள்ளத்தாக்கு பகுதியுடன் இணைக்கும் ஸ்ரீநகர் லேக் தேசிய நெடுஞ்சாலை
சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று, நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு
திறந்து விடப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.
பாசமும், வெறுப்பும்!
வெள்ளத்தில்
சிக்கியுள்ளவர்களை, ராணுவ வீரர்கள், தங்கள் உயிரை கொடுத்து மீட்டு
வருகின்றனர். மீட்கப்பட்ட பலரும், கண்ணீர் மல்க, ராணுவ வீரர்களுக்கு,
கைகூப்பி நன்றி தெரிவித்தனர். அதேநேரத்தில், 'ஜம்மு காஷ்மீர் மக்களின்,
பிரதிநிதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும், ஹுரியத் மாநாட்டு
அமைப்புகளை சேர்ந்தவர்கள், இருக்கும் இடமே தெரியவில்லை. இதேபோல், முதல்வர்
ஒமர் அப்துல்லா தலைமையிலான, மாநில அரசும், வெள்ளப் பாதிப்பில் இருந்து
மக்களை மீட்க, போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை'
என்றும், பொதுமக்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
நடிகை எங்கே?
பிரபல
மலையாள நடிகை அபூர்வா தாமஸ். மலையேற்றத்தில் ஆர்வம் உள்ள இவர்,
இதுகுறித்து பயிற்சி பெறுவதற்காக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு
சென்றிருந்தார். ஸ்ரீநகரில், இவர் தங்கியிருந்த ஓட்டலை வெள்ளநீர்
சூழ்ந்தது. இதையடுத்து, அபூர்வா உட்பட, ஓட்டலில் தங்கியிருந்த அனைவரும்,
ஓட்டலின் மாடியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இரண்டு நாட்களாக,
அங்கிருந்து, கேரளாவில் உள்ளவர்களுடன், அபூர்வா பேசி வந்தார்.
நேற்றிலிருந்து, அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இதனால், அவரின் நிலை
என்பது தெரியாமல், அவரின் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
Comments