பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் பேரன்கள்
ஜிந்த்:அரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், அம்மாநிலத்தின் முக்கிய தலைவரும், மறைந்த துணை பிரதமரான தேவிலாலின் பேரன்கள் அனிருத் மற்றும் ஆதித்யா ஆகியோர் பா.ஜ.க.வில் இணைந்தனர்.ஜிந்தில் நடந்த விஜய் சங்கலாப் யாத்ராவில் பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்ட பேரணியில்அவரது முன்னிலையில் அனிருத்தும் ஆதித்யாவும் தங்களை பா.ஜ.க.வில்.,இணைத்து கொண்டனர்.

விவசாயிகளின் தலைவராக கருதப்பட்ட தேவிலாலுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இவர்களில் நீண்ட நாட்களுக்கு முன் இறந்த மகனான ஜகதீஷ் சவுதாலாவின் மகன்கள் தான் அனிருத்தும் ஆதித்யாவும். அவரது மற்றொரு மகனும், முன்னாள் முதல் மந்திரியுமான ஓப் பிரகாஷ் சவுதாலா ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று திகார் சிறையில் 10 ஆண்டு தண்டனை அனுபவித்து வருகிறார்.முன்னதாக பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்னர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருந்தார் இந்த அனிருத்.
Comments