தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு கடலோர மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. காஷ்மீர், ஒடிசா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் வௌ்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வகையில், கர்நாடகா மாநிலத்தின் சில மாவட்டங்களும் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
8 மாவட்டங்களில் சேதம்:
கர்நாடகாவின் 8 மாவட்டங்களில் கடும் வௌ்ள சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக,
குல்பர்கா, கதக், ராய்ச்சூர், தாவணகெரே, பெல்லாரி, பெல்காம் ஆகிய
மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த பல
ஆயிரம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி, நாசமாகிவிட்டன. 30
ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் இடிந்தும், சேதம் அடைந்தும் உள்ளன. இதுவரை 9
பேர் பலியாகி உள்ளனர்.
காங்.எம்.எல்.ஏ.,க்கள் டூர்:
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 15
பேர் தங்கள் குடும்பத்துடன் கடந்த வாரம் ஐரோப்பாவிற்கு சுற்றுலா
சென்றுவிட்டனர். மாநிலத்தின் ஒரு பகுதியில் கடும் வௌ்ள சேதம் ஏற்பட்ட
நிலையில், காங்கிரஸ் எம்.எல்,ஏ.,க்கள் குடும்பத்துடன் டூர் சென்றுள்ளதை
எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்ததுடன், கண்டனமும் தெரிவித்துள்ளன.
சித்தராமையா எரிச்சல்:
எம்.எல்.ஏ.,க்களின் டூர் விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கர்நாடக
முதல்வர் சித்தராமையாவை சந்தித்த செய்தியாளர்கள், அவரிடம் இது குறித்து
அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர். இதனால் எரிச்சல் அடைந்த சித்தராமையா,
'அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளுக்கு நான் எப்படி பதில் சொல்ல
முடியும். இந்த கேள்விகளை அவர்களிடம் கேளுங்கள். அவர்கள் டூர் சென்ற விஷயம்
எனக்கு தெரியாது. அவர்கள் சொந்த பணத்தில் சென்றுள்ளனர். நான் அனுமதி
எதுவும் கொடுக்கவில்லை' என்றார். இந்நிலையில், இந்த டூர் பிரச்னையை
எதிர்கட்சிகள் பெரிதுபடுத்தி வருகின்றன.
Comments