ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.61.40

மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.61.40-ஆக இருந்தது. மாத கடைசி என்பதாலும், டாலருக்கான தேவை அதிகரித்து இருப்பதாலும், பங்குசந்தைகளில் காணப்படும் ஒரு நிலையற்ற தன்மையாலும் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு ரூ.61.15-ஆக இருந்தது.

Comments