டோக்யோ:ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில்
உள்ள நகனோ மற்றும் கிபு பகுதிகளுக்கு இடையில் ஓன்டாகே என்ற எரிமலை
வெடித்து சிதறி மலையேற்றக்குழுவினர் 30 பேர் பலியானதாக ஜப்பான் செய்தி
வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.ஓன்டாகே எரிமலையில் சுமார் 250 பேர் இந்த
மலையின் மீது ஏறி பயிற்சி செய்துக் கொண்டிருந்தபோது ,எரிமலையில் இருந்து
வெளியான வெப்பம் கலந்த சாம்பல் தாக்கி மூச்சுத்திணறி மயங்கிக் கிடந்த 30
பேரை மீட்புப் படையினர் கண்டெடுத்துள்ளதாக ஒரு பிரிவினரும், அந்த 30 பேரும்
பிணமாக மீட்கப்பட்டதாக ஒரு தரப்பினரும் கூறியுள்ளதாக ஜப்பான் செய்தி
வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருக்கின்றன.காணாமல் போனவர்களை மீட்கும் பணி
தொடர்ந்து நடந்து வருகின்றன.
Comments