கற்பழிப்புக்கு பஞ்சமில்லை இங்கே., 3 ல் 2 பலி ; 1 க்கு குறை பிரசவம்

மும்பை: அசாம் மாநிலம், மகாராஷ்ட்டிராவில் 3 இளம் பெண்கள் கற்பழிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். அசாமில் கற்பழித்து 2 பெண்கள் தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளனர். மும்பையில் மிரட்டி கற்பழித்த சிவசேனா கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


நாட்டில் கற்பழிப்பு வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்திய உத்திரபிரதேசம் பாடான் சம்பவத்தில் 2 பெண்கள் கற்பழித்து மரத்தில் தொங்க விடப்பட்டனர். இந்த வழக்கில் கைதானவர்கள் தற்போது ஜாமினில் வந்துள்ளனர். கற்பழிப்பு வழக்கில் தொடர்புடையவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
சிவசேனா துணை தலைவர் கைது : இந்நிலையில் மும்பையில் பள்ளி நடத்தும் நிர்வாகி ஒருவர் மாணவியை ( 15 வயது) கற்பழித்தார். இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் பள்ளியில் இருந்து நீக்கி விடுவேன் என மிரட்டினார். இந்நிலையில் இந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். காலம் முதிர்வு பெறாத நிலையில் குழந்தை பெற்றார். இதன்பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. தொடர்ந்து அவர் போலீசிடம் புகார் அளித்தார். இதன்படி சிவசேனா துணை தலைவர் வாசுதேவ் நம்பியார் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இது போல் அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக 10ம் வகுப்பு, 9ம்வகுப்பு படிக்கும் மாணவிகள் காணாமல் போயினர். இந்நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு மரத்தில் பிணமாக தொங்கினர். தகவல் அறிந்த போலீசார் பிணங்களை கைப்பற்றி போஸ்ட்மார்டம் செய்வதற்கு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். கற்பழித்த குற்றவாளிகள் 2 மாணவிகளையும் ஒரே கயிற்றில் முனைக்கு ஒன்றாக கட்டி மரத்தில் தொங்க விட்டிருந்தனர். இந்த சம்பவம் இங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குற்றவாளிகள் யார் என கண்டுபிடிக்க போலீசார் மும்முரமாக விசாரித்து வருகின்றனர்.

Comments