சில்லறை சிகரெட் விற்பனைக்கு தடை வருகிறது!: பொது இடத்தில் "ஊதித் தள்ளினால்" ரூ.20,000 வரை அபராதமாம்!

சில்லறை சிகரெட் விற்பனைக்கு தடை வருகிறது!: பொது இடத்தில் டெல்லி: நாடு முழுவதும் சில்லறை சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அத்துடன் பொது இடத்தில் புகை பிடிப்பவர்களுக்கு ரூ200 முதல் ரூ20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது குறித்து பரிந்துரைகள் அளிக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒரு வல்லுநர் குழுவை அமைத்திருந்தது. இந்த குழு தனது பரிந்துரைகளை சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் அளித்துள்ளது. இந்த வல்லுநர் குழு அளித்திருக்கும் பரிந்துரைகளில் சில: 25 வயதினருக்கு குறைவானவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்யக் கூடாது பொது இடங்களில் புகை பிடிப்போருக்கு ரூ200 முதல் ரூ20ஆயிரம் வரை அபராதம் சிகரெட்டை சில்லறை விற்பனைக்கு தடை விதிப்பது. ஒட்டுமொத்த சிகரெட் விற்பனையில் சில்லறை மூலமாக மட்டும் 70% விற்பனையாகிறது. தற்போது சில்லறை விற்பனையை தடை செய்தால் பெருமளவு புகை பிடிக்கும் பழக்கம் முடிவுக்கு வரும். சிகரெட் பாக்கெட்டுகளில் 80% அளவுக்கு எச்சரிக்கை விளம்பரம் அச்சிடப்பட வேண்டும். சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை விளம்பரம் செய்யாத நிறுவனங்களுக்கு ரூ 5ஆயிரம் முதல் ரூ50 ஆயிரம் வரை அபராதம். எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும்.

Comments