ஸ்ரீநகர்: பாகிஸ்தான் பகுதியில் இருந்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு
வழியாக, இந்திய பகுதிக்குள் ஊடுருவ, 200 பயங்கரவாதிகள், பயங்கர
ஆயுதங்களுடன் காத்திருக்கின்றனர்,'' என, ஸ்ரீநகரில் உள்ள ராணுவ அதிகாரி
சுப்ரதா சகா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சமீபத்தில் பெய்த பலத்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, 280க்கும் மேற்பட்டோர் பலியாயினர்;
ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்தனர். தலைநகர்
ஸ்ரீநகரின் பல பகுதிகளில், இன்னும் மழைநீர் வடியாமல் உள்ளது. அதனால்,
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில், முதல்வர் ஒமர் அப்துல்லா
தலைமையிலான, தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு
ஈடுபட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், மழை வெள்ளம், கடும் சேதத்தை
ஏற்படுத்திக் கொண்டிருந்த நேரத்திலும், பாக்., பகுதியில் இருந்து, எல்லைக்
கட்டுப்பாட்டு கோடு வழியாக, பயங்கரவாதிகள் அவ்வப்போது ஊடுருவ முயற்சி
மேற்கொண்டனர். ஆனாலும், அந்த முயற்சிகளை ராணுவத்தினர் விழிப்புடன்
செயல்பட்டு முறியடித்தனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சமீபத்தில் பெய்த பலத்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, 280க்கும் மேற்பட்டோர் பலியாயினர்;
இந்தச் சூழ்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள ராணுவ அதிகாரி சுப்ரதா சகா கூறியதாவது:பாகிஸ்தான் பகுதியில் இருந்து, எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக, இந்திய பகுதிக்குள் ஊடுருவ, தற்போது, 200 பயங்கரவாதிகள், பயங்கர ஆயுதங்களுடன் காத்திருக்கின்றனர். கடந்த சில நாட்களாக, பயங்கரவாதிகள் மேற்கொண்ட, ஊடுருவல் முயற்சியை ராணுவத்தினர் முறியடித்திருந்தாலும், இன்னும், 200 பேர் எல்லைக்கு அப்பால் காத்திருக்கின்றனர்.ஜம்மு காஷ்மீர் மழை வெள்ளத்தில், ராணுவ முகாம்களில் பாதிக்கும் மேற்பட்டவை, கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், எல்லையில் பாதுகாப்பு பலவீனம் அடையவில்லை. பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை நிர்மூலமாக்க, இந்திய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், சமீபத்தில், அன்னிய நாட்டு பயங்கரவாதி உமர் பட் என்பவன், பாதுகாப்புப் படையினரால், சுட்டுக் கொல்லப்பட்டான். அத்துடன், கடந்த, 10 நாட்களில், பயங்கரவாதிகள் மேற்கொண்ட, ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதோடு, பயங்கரவாதிகள் ஐந்து பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில், ராணுவத்தினர் மீட்புப் பணிகளை மேற்கொண்ட போது, வி.வி.ஐ.பி.,க்களுக்கும், காஷ்மீர் அல்லாத இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே, முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது தவறு.உள்ளூர்வாசிகள் அல்லது வெளியூரைச் சேர்ந்தவர்கள் என, ராணுவத்தினர் எந்தப் பாகுபாடும் காட்டவில்லை. அதிகபட்ச உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாங்கள் செயல்பட்டோம். மிகுந்த அபாயத்தில் இருந்தவர்களை மீட்பதற்கு, முதலில் முக்கியத்துவம் கொடுத்தோம். அதன்பின், மற்றவர்களை மீட்டோம்.மழை வெள்ளத்தில், ராணுவத்திற்கு சொந்தமான வெடிமருந்து கிடங்குகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும், ஆயுதங் கிடங்குகளில் இருந்த சில பொருட்களை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது.இவ்வாறு, ராணுவ அதிகாரி சுகா தெரிவித்தார்.
துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் பலி:
'ஜம்மு காஷ்மீரில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய, தாங்தர்
பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று
அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டையில், நான்கு பயங்கரவாதிகள்
கொல்லப்பட்டனர்' என, ராணுவ தகவல் தொடர்பாளர் கூறியுள்ளார்.அவர் மேலும்
கூறுகையில், 'கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் யார் என்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வசமிருந்த, ஏகே47 ரக துப்பாக்கிகள் மற்றும்
வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன' என்றார்.
Comments