நேற்று, பஸ்கள் இயக்கம் படிப்படியாக துவங்கிய போதிலும், பதற்றம் காரணமாக பயணிகளின் வருகை மிகவும் குறைவாக இருந்தது.
தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசு விரைவு பஸ்களும் இயக்கப்பட்டன. வழக்கமாக, ஞாயிற்றுக்கிழமையில், 65 சதவீத மாநகர பஸ்கள் மட்டுமே சென்னையில் இயங்கும். நேற்று அதிகாலை, சூழல் தெரியாததால், 30 முதல் 40 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பகல், 9:00 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கம் வழக்கம் போல் துவங்கியது.இருப்பினும், விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில், அரசு பஸ் எரிக்கப்பட்டது. இதனால், தென் மாவட்டங்களில் பதற்றம் நீடித்தது.திருநெல்வேலியில் இருந்து, 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. போலீசாரின் அறிவுறுத்தல்படியே, நாகர்கோவில் மண்டலத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், தென் மாவட்டங்களில், பஸ்கள் இன்றி பயணிகள் தவிப்பிற்கு ஆளாகினர்.மற்ற இடங்களில், படிப்படியாக பஸ்கள் இயங்கத் துவங்கிய போதிலும், பயணிகளின் வருகை மிகக் குறைவாகவே இருந்தது. இதனால், பெரும்பாலான பஸ்கள், 10க்கும் குறைவான பயணிகளுடன் பயணித்தன. தமிழகம் முழுவதும், ஆம்னி பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
Comments