
பெங்களூரு:சொத்து குவிப்பு வழக்கில், சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதா, நேற்று இரண்டாவது நாளை சிறையில் கழித்தார்.
பெங்களூரு
பரப்பன அக்ரஹார சிறையில், பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு,
கைதிக்குரிய எண்ணாக, 7,402 வழங்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு, சிறை
அதிகாரிகள், அவருக்கு, சப்பாத்தி, குருமா வழங்கியும், அதை சாப்பிட
மறுத்து, பழங்களையே சாப்பிட்டார். வெளியிலிருந்து உணவு கொண்டு வர சிறை
நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அதேநேரத்தில், தலையணை மற்றும் பெட்ஷீட்கள்
வழங்கப்பட்டன.அதிகாலை, 5:30 மணிக்கு எழுந்த அவர், சிறை வளாகத்திலேயே
நடைபயிற்சி மேற்கொண்டார். பின், அவருக்கு, சிறை ஊழியர் வீரப்ப பெருமாள்
என்பவர், மூன்று இட்லி, சாம்பார், சட்னி அடங்கிய உணவுப் பொட்டலத்தை
கொடுத்தார்.காலை, 7:30 மணிக்கு அதை சாப்பிட்ட ஜெயலலிதாவுக்கு, மூன்று தமிழ்
நாளிதழ்களும், இரண்டு ஆங்கில நாளிதழ்களும் வழங்கப்பட்டன. காலை, 8:00
மணிக்கு, ஒரு டம்ளர் பால் வழங்கப்பட்டது.சிறையில் பெண்கள் பிரிவில்,
வி.வி.ஐ.பி.,க்களுக்கான அறையான, 23ல் அவர் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று
ஞாயிற்றுக்கிழமை என்பதால், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
Comments