சிவசேனா -151 - பா.ஜ., 119 தொகுதி பங்கீடு ? ஆபத்து கட்டத்தில் 25 ஆண்டு கால உறவு


மும்பை: வரவிருக்கும் மகாராஷ்ட்டிர தேர்தலில் பா.ஜ., - சிவசேனா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக முடிவு ஏற்படுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இது தொடர்பாாக சிவசேனா , பா.ஜ,. நிர்வாகிகள் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

25 ஆண்டு காலம் கூட்டணி உறவு வைத்துள்ள இந்த இரு கட்சிகளும் இணைந்து வரும் சட்டசபை தேர்தலில் ( அக்டோபர் 15ம் தேதி ) ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற குறிக்கோளில் உள்ளன.
ஆனால் இந்த இரு கட்சிகளும் இணைந்தால்தான் பலம் பொருந்திய ஓட்டு வங்கியாக மாற்ற முடியும். பிரியும் பட்சத்தில் இது காங்கிரசுக்கு சாதமாக அமைந்து விடும். இதனால் இரு கட்சிகளும் இணைந்தே போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். தொகுதி பங்கீட்டில் சிவசேனா கட்சி தனக்கு 155 தொகுதிகள் கேட்கிறது. பா.ஜ.,வுக்கு 125 தொகுதிகள் ஒதுக்கிடவும் ஒத்து கொண்டுள்ளன. ஆனால் இதனை மாநில பா.ஜ., ஏற்க மறுத்து வருகிறது. பா.ஜ., 135- 135 என்று கணக்கு போட்டு காட்டுகிறது. இது தொடர்பாக நேற்று நடந்த பேச்சு தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் இன்று மும்பையில் சிவசேனா உயர்நிலை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்ரே மராட்டிய மக்களுக்கு சேவை செய்ய எங்கள் அணியே முதல்வர் பதவியில் அமர வேண்டும். நாங்கள் 151 தொகுதிகளிலும் 119 தொகுதிகள் பா.ஜ.,வுக்கு வழங்க முடியும். கூட்டணி பிரியாமல் இருப்பதற்கு பா.ஜ.,வுக்கு கடைசி வாய்ப்பு வழங்குகிறோம். என்று கூறினார்.

கூட்டணி தொடரவே பா.ஜ., விருப்பம் ; சிவசேனாவுடனாகூட்டணி தொடரவே பா.ஜ., விருப்பம் உள்ளதாக மாநில நிர்வாகிகள் கூறியுள்ளனர். சிவசேனா கட்சியினர் சீட் பங்கீடு தொடர்பாக டி.வி., உள்ளிட்ட மீடியாக்கள் மூலம் தெரிவிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். நிர்வாக மட்ட அளவில் பேசி முடிக்க வேண்டும் என்று கூறினர்.
காங்., தேசியவாத காங்., தொகுதி பங்கீடு ; மகாராஷ்ட்டிர தேர்தலில் காங்., தேசியவாத காங்., கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் பங்கீடு குறித்து இறுதிகட்ட பேச்சு இன்று நடக்கிறது. இதில் உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 144 தொகுதிகள் தர வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கோரியுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ 125 தொகுதிகள் தருவதாக கூறியுள்ளது.

Comments