கண்காணிப்பு
"அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனரகம் (DAVP) மூலமாக இதன்
செயல்பாட்டையும் விளம்பரத்தின் தாக்கத்தையும் கண்காணித்து வருகிறது" என
அவர் தெரிவித்தார்.
ஏழரை கோடி வீடுகள்
எழுச்சிமிகு நிதி சேர்ப்புத் திட்டத்தின் கீழ் சுமார் ஏழரை கோடி வீடுகளில்
வங்கிக் கணக்கை வரும் வருடம் ஜனவரி 26ஆம் தேதிக்குள் துவக்க அரசு
வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.
25 விளம்பர ஏஜென்சிகள் போட்டி
இந்தியாவில் தற்போது 40 சதவிகித மக்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. இவர்களை
கவரவும் வங்கி கணக்கு திறக்கும் பணியை வேகப்படுத்தவும் விளம்பரங்களை
மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை பெற
ஜே.டபிள்யு.டி, முத்ரா உட்பட சுமார் 25 விளம்பர ஏஜென்சிகள் போட்டியிட்ட
நிலையிலே ஆர்.கே.சுவாமி பிபிடிவோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு இப்பணி
ஒப்படைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 23ஆம் தேதி
ஓப்பந்தம் பெற்ற ஆர்.கே.சுவாமி நிறுவனம், தனது பணிகளை கடந்த ஆகஸ்ட்23ஆம்
தேதி இந்த விளம்பரத்தைத் துவங்கி தற்போது 29 மாநிலங்களில் பல்வேறு
கட்டங்களாக செயல்பட்டு வருகிறது.
சங்கீதா ஷெட்டி
"இந்திய அரசு இதற்கான பெயரையும் முத்திரையையும் (லோகோ) பொது மக்களிடம்
இருந்து பெற்று எங்களிடம் ஒப்படைத்தது. இந்த உக்தியை நாங்கள் முன்னெடுத்து
அதை ஒரு உருமாற்றம் செய்து ஒரு விளம்பரமாக செய்து வங்கி முறையை
எளிமையாக்கியுள்ளோம்" என ஆர் கே சுவாமி நிறுவனத்தின் துணை செயல் தலைவர்
சங்கீதா ஷெட்டி தெரிவித்தார்.
விளம்பரப்படுத்தும் முறை
பிரதமரின் வங்கி கணக்கு திட்டத்தை தொலைக்காட்சி மட்டுமல்லாது, இதழ்கள்
மற்றும் வானொலி மூலமாகவும், இந்த நிறுவனம் பெரும் விளம்பரப் பணிகளை நாடு
முழுதும் சுமார் 77000 மையங்களை அமைத்து அதன் மூலம் கணக்கை சுமார் 1,15,000
வங்கிக் கிளைகளில் துவங்க ஊக்குவித்து வருகிறது.
13 மொழிகள்
அச்சிடப்பட்ட இதழ்கள் மூலமான விளம்பரம் சுமார் 120 முதல் 130 செய்தித்தாள்களில் 13 மொழிகளில் வெளியானது.
முதல் நாள்
இத்திட்டம் தொடங்கப்பட்ட நாளான ஆகஸ்ட் 28 ஆம் தேதி, ஒன்றரைக் கோடி வங்கிக்
கணக்குகள் ஜன் தன் யோஜனா திட்டம் மூலம் துவங்கப்பட்டன. "ஏற்கனவே சுமார்
2.14 கோடி கணக்குகளை எட்டிவிட்டதால், அரசு இந்த திட்டத்தின் அடுத்த கட்டம்
குறித்து முடிவெடுக்க புதிய நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது" என
மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Comments