முதல்வரை சந்தித்து மனு கொடுக்க இருக்கும் விஜய்.?!

Vijay to meet CM.?!
கத்தி படத்துக்கு எதிரான போராட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது கத்தி பட வேலைகள். படத்தை தீபாவளிக்கு வெளியிடும் திட்டத்தில் பம்பரமாக சுற்றிக் கொண்டிருக்கிறது கத்தி படக்குழு. அனிருத்தின் இசையில் கத்தி படத்தில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் தயாராகிவிட்டதாம். இன்னும் விஜய் பாடும் பாடல் மட்டுமே ஒலிப்பதிவு செய்ய வேண்டியிருக்கிறதாம். அதையும் இந்த வாரத்தில் கண்டிப்பாக முடித்துவிடுவதாக சொல்லி இருக்கிறாராம் அனிருத். பட வேலைகள் ஒரு பக்கம் நடந்து வரும்நிலையில், கத்தி படத்தின் இசைவெளியீட்டு விழா வேலைகளையும் திட்டமிட்டு வருகின்றனர்.

செப்டம்பர் 18 ஆம்தேதி கத்தி ஆடியோவை ரிலீஸ் செய்தே தீருவது என்ற உறுதியாக இருக்கிறதாம் லைகா தயாரிப்பு நிறுவனம். கத்தி ஆடியோ விழாவை லண்டனில் வைத்து பிரம்மாண்டமான முறையில் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். லண்டனில் லைகாவுக்கு எதிராக போராடி வருபவர்களின் கை ஓங்கி இருப்பதால் அங்கே விழா நடத்துவது நல்லதல்ல என்பதால் அந்த திட்டத்தை தற்போது கைவிட்டு விட்டனர். எனவே, சென்னையில் உள்ள பிரபல நட்சத்திரஹோட்டலில் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

கத்தி படத்தை எதிர்த்து வருபவர்களுக்கு சவால்விடும் வகையிலேயே சென்னையில் இசை வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்தார்களாம். இதன் மூலம் எதிர்ப்பாளர்களின் பல்சை அறியவும், அதை வைத்து பட வெளியீட்டை திட்டமிடவும் இருக்கிறார்களாம். சென்னையில் நடைபெற உள்ள கத்தி இசைவெளியீட்டு விழாவுக்கு பாதுகாப்பு கேட்டு முதல்வரை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறாராம் விஜய்.

Comments