கோரிப்பாளையம் மேம்பாலம்: திட்ட அறிக்கை தயார்

சென்னை: மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கோரிப்பாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சட்சபையில் இன்று நடந்த நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அ.தி.மு.க., உறுப்பினர் போஸ் கேள்விக்கு பதிலளித்த அவர், மேம்பாலம் தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், மேம்பாலத்தின் வடிவமைப்பும் தயார் செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். விரைவில் மேம்பால பணிகள் துவங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

Comments