பா.ஜ., வெற்றிக்கு காங்., தான் காரணம்: அத்வானி பெருந்தன்மை

புதுடில்லி:''லோக்சபா தேர்தலில், பா.ஜ., மகத்தான வெற்றி பெற்றதற்கு, நரேந்திர மோடியின் பிரசாரத்தை விட, காங்கிரஸ் கட்சியினர் செய்த தவறுகளே, முக்கிய காரணமாக அமைந்தது,'' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறினார்.

பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியதாவது:
சுதந்திர தின விழாவில், பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, மிகச் சிறப்பாக இருந்தது. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நலன் அளிக்கும், பல நல்ல திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில், பா.ஜ., மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, மிகப் பெரிய வெற்றியை, பா.ஜ.,வுக்கு நாட்டு மக்கள் பரிசளித்துள்ளனர். 282 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.இந்த மகத்தான வெற்றிக்கு, நரேந்திர மோடியின் பிரசாரம் பெரிதும் உதவியது. ஆனாலும், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தான், இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.கடந்த, 10 ஆண்டு கால ஆட்சியில், அவர்கள் செய்த தவறுகளும், மெகா ஊழல்களுமே, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு காரணமாக விளங்கியது. இதற்காக, காங்., கட்சியினருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.இவ்வாறு, அத்வானி பேசினார்.

Comments