இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முதல் பக்கத்தில் வாசகர் கடிதம் பகுதியில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், பிரதமர் மோடியையும் இழிவுபடுத்தும் வகையில் தலைப்பிட்டு புகைப்படத்துடன் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.
இந்தியா கண்டனம்:
இது குறித்து இந்திய தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதும், இணையளத்தில்
இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கட்டுரையும், படமும் அகற்றப்பட்டன.
ஆனால், இலங்கை நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா
வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்
எழுதினார். பார்லிமென்ட்டில் இப்பிரச்னையை எழுப்பிய அ.தி.மு.க.,வினர்,
இலங்கை அரசு தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினர்.
தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்தன.
கட்டுரை, படம் அகற்றம்:
இதற்கிடையில், சர்ச்சைக்குரிய படமும், கட்டுரையும் வௌியானதற்கு
நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக இலங்கை அரசு அறிவித்தது. இது குறித்து,
சர்ச்சைக்குரிய கட்டுரை வௌியான அதே பாதுகாப்பு துறை இணையதளத்தில், 'இலங்கை
அரசின் உரிய அனுமதியின்றி இந்த கட்டுரை பாதுகாப்புத்துறை இணையதளத்தில்
வெளியாகியுள்ளது. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர்
ஜெயலலிதா ஆகியோரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம்,' என்று
குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் நடக்கும் 15 வயது
உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கையில்
இருந்து கடந்த ஞாயிறன்று சென்னை வந்த 16 வீரர்கள் இலங்கைக்கே திருப்பி
அனுப்பப்பட்டனர்.
பார்லி.,யில் கோரிக்கை:
பார்லிமென்ட்டில்
அ.தி.மு.க., உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். தமிழக
முதல்வரை தரக்குறைவாக விமர்சித்து இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில்
கட்டுரை வெளியான விவகாரத்தில், இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர
வேண்டும் என லோக்சபாவில் அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இது மிகவும் 'சீரியஸ்' ஆன விஷயம். இவ்விவகாரத்தில் இந்தியா, இலங்கைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. விரைவில் இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரை அழைத்து விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்தார். ர்லி., விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, இலங்கையின் இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதை அரசு கண்டிப்பதாக கூறினார்.
ராஜபக்சே வருத்தம்:
இதையடுத்து, டில்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்த வௌியுறவுத்துறை
அதிகாரிகள், ஜெ., மோடி குறித்த கட்டுரைக்கு இந்தியாவின் சார்பில் கடும்
கண்டனத்தை தெரிவி்ததனர். இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் பிரதமர்
மோடி குறித்த சர்ச்சை கட்டுரை வௌியானதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருத்தம்
தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், நடந்த சம்பவத்திற்கு வருத்தம்
கேட்டுள்ள ராஜபக்சே, அரசு இணைய தளத்தில் இந்த சர்ச்சை கட்டுரை வௌியானது
எப்படி என்பது குறித்து விளக்கம் கேட்டுள்ளதாக கூறி உள்ளார்.
Comments