கிளாஸ்கோ: உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் இந்திய அணிகளுக்கு தங்கம், வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், உலக அணிகளுக்கான பில்லியர்ட்ஸ்
சாம்பியன்ஷிப் போட்டி முதன் முறையாக நடந்தது. இதன் ஒரு அரையிறுதியில்
பங்கஜ் அத்வானி, ரூபேஷ் ஷா, தேவேந்திர ஜோஷி, அசோக் சாண்டில்யா அட்ங்கிய
இந்திய பி’ அணி, அயர்லாந்தை 6–0 என, வென்றது.
மற்றொரு அரையிறுதியில் அலோக்
குமார், பாலசந்திர பாஸ்கர், சவுரவ் கோத்தாரி, துருவ் அடங்கிய இந்திய ‘ஏ’
அணி, இங்கிலாந்தை 5–1 என, வீழ்த்தியது.
பைனலில் பங்கஜ் அத்வானியின் இந்திய ‘பி’ அணி, இந்திய ‘ஏ’ அணியை 5–4 என்ற
கணக்கில் சாய்த்து, தங்கம் வென்றது. தோல்வியடைந்த இந்திய ‘ஏ’ அணிக்கு
வெள்ளி கிடைத்தது. இதுகுறித்து பங்கஜ் அத்வானி கூறுகையில்,‘‘ சுதந்திர தினத்தில்
இந்தியாவுக்காக தங்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது,’’ என்றார்.
Comments