" இறுதி விமர்சனங்கள் காயப்படுத்தியது” - மன்மோகன் மகள்

புதுடில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மகள் தாமன்சிங் , மன்மோகன், குர்சரண் ஆகியோரது வாழ்வு குறித்து புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகம் நாளை ( ஞாயிற்றுக்கிழமை ) வெளியிடப்படுகிறது. கடந்த 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்த காலத்தை இவர் இந்த புத்தகத்தில் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. தாமன்சிங் ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

எனது தந்தை எல்லாவற்றையும் அவர் எங்களிடம் பகிர மாட்டார். சோனியாவை நான் ஒரு முறை சந்தித்திருக்கிறேன் அவர் மிக மென்மையானவர். திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மான்டேக்சிங்கும், எனது தந்தையும் மிக நெருக்கமான புரிந்தவர்களாக இருந்தனர். எனது தந்தை சுயசரிதை எழுத வேண்டும் என நான் விரும்புகிறேன். பல்வேறு அநுபவங்கள் கொண்ட இவரது அறிவுநுட்பம் பலருக்கும் பயன்படும்படியாக இருக்கும்.


எனது தந்தை மிக நேர்மையானவர். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் எனது தந்தைக்கு ஏற்பட்ட அவப்பெயரால் நான் மிகவும் வருத்தப்பட்டேன். எனது தந்தை கடுமையாக உழைத்தார். ஆனால் அவரது கடும் உழைப்பு போற்றப்படவில்லை என நினைத்த போது துயரப்பட்டேன். பொது கருத்து என்பது சிறிய காலம் மட்டுமே இருக்கும். இது நொடிக்கு, நொடி மாற்றம் பெறும்.
2வது முறை மன்மோகன்சிங் பிரதமராக தேர்வு செய்யப்பட்டது குறித்து ?
இது பெரும் சவாலான விஷயமாகவும், இதனை அவருக்கு கிடைத்த கவுரவமாகவும் தந்தை எடுத்து கொண்டார்.
எனது தந்தை நிதி அமைச்சராக இருந்தபோது மீடியாக்களின் செயல்பாடு நன்றாக இருந்தது. எனது தந்தை பிரதமராக இருந்த போது மீடியாக்கள் மாறிப்போனது என்பதை உணர முடிகிறது. எனது தந்தை எப்போதும் மாறவில்லை. இவ்வாறு தாமன்சிங் கூறியுள்ளார்.

Comments