கோல்கட்டா:''டாடா நிறுவனங்களின் கவுரவ தலைவர், ரத்தன் டாடாவுக்கு, 73,
வயதாகிவிட்டதால், அறிவை இழந்துவிட்டார்,'' என, மேற்கு வங்க நிதியமைச்சர்,
அமித் மித்ரா கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
'நானோ' கார் தொழிற்சாலை:திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்கத்தின் சிங்குர் என்ற இடத்தில், 'நானோ' கார் தொழிற்சாலையை அமைக்க, டாடா நிறுவனம், 2008ல் திட்டமிட்டது.
இதையடுத்து, அந்த தொழிற்சாலை, குஜராத்தின் சனந்த் நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால், டாடாவுக்கு, மிகுந்த பொருட்செலவு ஏற்பட்டது. இதையடுத்து, ரத்தன் டாடாவுக்கும், மம்தா பானர்ஜிக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை.பத்திரிகை ஒன்றுக்கு, ரத்தன் டாடா சமீபத்தில் அளித்த பேட்டியில், 'மேற்கு வங்கம் வளரவே இல்லை. இன்னும் கிராமப்புறம் போலத் தான் இருக்கிறது' என, தெரிவித்திருந்தார்.
மூளை குழம்பிவிட்டது:இதை அறிந்த அந்த மாநில நிதியமைச்சர், அமித் மித்ரா, நேற்று கூறுகையில், ''ரத்தன் டாடாவுக்கு வயதாகிவிட்டதால், மூளை குழம்பிவிட்டது. என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பேசுகிறார். மேற்கு வங்கம் தொழில்மயமாகி வருவதை, அவர் அறியவில்லையா அல்லது அறிய விரும்பவில்லையா என்பது தெரியவில்லை,'' என்றார். நாட்டின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான, டாடாவின் கவுரவ தலைவரை, மேற்கு வங்க அமைச்சர் இவ்வாறு கண்டிக்கலாமா என, பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Comments