ஜப்பான் நாட்டுக்கு தாம் மேற்கொள்ளவுள்ள அரசு முறை சுற்றுப்பயணத்தால்
இரு நாட்டு நல்லுறவுகள், ஒத்துழைப்புகள் புதிய உச்சத்தை எட்டும் என்று
பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.4 நாட்கள் பயணமாக
ஜப்பான் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ஆம் தேதி செல்கிறார்.
பிரதமராகப் பதவியேற்ற பிறகு அவர் ஜப்பான் நாட்டுக்குச் செல்வது இதுதான்
முதல் முறை.
மோடி பெருமிதம்:
ஆகஸ்ட் 30-ல். ஜப்பான் நாட்டிற்கு செல்கிறேன்.இரு நாட்டு நல்லுறவுகளையும் இப்பயணம் வலுப்படுத்தும் என்று எதிர்பார்த்துள்ளேன். ஜப்பானிற்கு கடந்த ஜூலையில் செல்ல நான் திட்டமிட்டிருந்தேன். ஆனால், பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடந்ததால், செல்ல இயலவில்லை.
புதிய உச்சம்:
இந்தியா-ஜப்பான் இடையே பல துறைகளில் நீடிக்கும் ஒத்துழைப்பும், நல்லுறவும் புதிய உச்சத்துக்குச் செல்லும் வாய்ப்பாக இப்பயணத்தைக் கருதுகிறேன். டோக்கியோ, கியோட்டோ நகரங்களுக்குச் சென்று ஜப்பானிய மாணவர்கள், அரசியல் தலைவர்கள், தொழிற்துறைத் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரை நான் சந்திக்கிறேன். குஜராத் மாநில முதல்ராக ஜப்பான் சென்று வந்த நினைவுகள் இப்போதும் மனதில் ஆழமாக பதிந்துள்ளன. ஜப்பானியர்களின் சிறந்த விருந்தோம்பலும், ஒத்துழைப்பும் எனது மனதில் ஆழப் பதிந்துள்ளன. புதுமையைக் கண்டுபிடிப்பதிலும், அதை உறுதியாகச் செயல்படுத்துவதிலும் ஜப்பானியர்கள் காட்டும் ஈடுபாடு மிகவும் ஈர்க்கக்கூடியது. இரு நாடுகளும் பரஸ்பரம் கற்றுக் கொள்ளும் சூழல்கள் உள்ளன.அணுசக்தி ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் வர்த்தக தொடர்பான பிரச்சினைகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்யும் இடம் பெறும் என்றார்.
அபேவை சந்திக்க ஆர்வம்:ஜப்பானுடனான இந்தியாவின் நட்பு, காலத்தால் அழியாதது. இரு வலுமிக்க ஜனநாயக நாடுகளும் உலகில் அமைதி, வளர்ச்சி நீடிக்க விரும்புவதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன.ஆகவே ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவைச் சந்திக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். அவரது தலைமையையும், முந்தைய வாய்ப்புகளின்போது அவருடன் நடத்திய சந்திப்புகளையும் மிகவும் மதிப்பதாக தெரிவித்தார் பிரதமர் மோடி
மோடி பயணத் திட்டம்:
ஜப்பான் நாட்டுக்கு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை பயணம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முதலில் திட்டமிட்டிருந்தார். ஆனால், தற்போது பயணத் திட்டத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டு ஒரு நாள் முன்னதாகவே அவர் ஜப்பானுக்குப் புறப்படுகிறார்.ஜப்பான் பயணத்தின்போது அந்நாட்டுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களில் நரேந்திர மோடியும், ஷின்சோ அபேயும் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஜப்பானில் இருந்து திரும்பி வந்த இரண்டு வாரங்களில், டில்லிக்கு வருகை தரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இது உலகின் முன்னோடி நாடுகளான ஜப்பான், சீனா ஆகியவற்றுடன் இணக்கமான உறவை வைத்துக் கொள்ள விரும்பும் நரேந்திர மோடியின் புதிய உத்தியை வெளிக்காட்டுவதாக என்று சர்வதேச அரசியல் விவகார வல்லுநர்கள் எண்ணுகின்றார்கள்.
Comments